என்னைப் பற்றி

எனது படம்
121, அண்ணாநகர், தெரு.4, பொன்னம்மாபேட்டை, சேலம்.636001. அலைபேசி எண் - 98426 82566 & 90924 53376

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

சாதி, குலம் என்றால் என்ன ?

சாதியென்றால் என்ன?
வருணாச்சிரம தர்மத்தின் ஒரு விரும்பத் தகாத வெளிப்பாடு இது எனக் கருதுகின்றேன்! சமுதாய அமைப்பில், ஆரம்ப காலத்தில் தொழில் ரீதியாக இது ஆரம்பிக்கப் பட்டிருக்கலாம். இதன் பின், பிராமணர்கள்,இதை வேதங்களுடன் தொடர்பு படுத்தி,

பிரமாவின் சிரசிலிருந்து 'பிராமணர்கள்' தோன்றியதாகவும்,
புயங்களில் இருந்து 'சத்திரியர்கள்' தோன்றியதாகவும்,
 இடுப்புப் பாகத்திலிருந்து வேளாளர்கள் தோன்றியதாகவும்,
பாதத்தில் இருந்து, 'சூத்திரர்கள்' தோன்றியதாகவும் கூறினார்கள்!

சூத்திரர்கள், அறிவு சம்பந்தம்மான எதற்கும் அருகதையில்லாதவர்கள் எனவும் கருதினார்கள்! பொதுவாக, இவர்கள் தீண்டத்தகாதவர்கள் என வகைப் படுத்தப் பட்டார்கள்! இவர்கள் வேதம் படிக்க முனைந்தால் இவர்களின், காதுகளில் காச்சிய 'ஈயம்' ஊற்றப் பட்ட சம்பவங்களும் நடந்திருக்கின்றன! இவர்கள் மேலே வரக்கூடாது, என்பதற்காக, இவர்களுக்கு 'அறிவு' சம்பந்தமான எல்லாமே மறுக்கப் பட்டது!      

நான்கு நாயன்மார்களில், திருநாவுக்கரசர் மட்டும் பிராமணர் அல்லாதார்!

குலம் என்றால் என்ன ? 
குலம் என்பது உறவுமுறையாலும், வம்சாவழியாலும் இணைக்கப்பட்டுள்ள ஒரு மக்கட் குழுவாகும். பொதுவாகக் குலம் ஓரளவு பெரியது. குலமொன்றின் உறுப்பினர்கள், பல தலைமுறைகளுக்கு முற்பட்ட ஒரு பொது முன்னோனைக் கொண்டிருப்பார்கள் 

(உ.ம்: ஒரு பூட்டனையோ, கொள்ளுப் பாட்டனையோ அல்லது இன்னும் முற்பட்ட ஒரு முன்னோனையோ பொதுவாகக் கொண்டிருக்கலாம்).

பாட்டன் பாட்டியை மட்டும் பொதுவாகக் கொண்ட உறவுமுறைக் குழுக்கள் கூட்டுக் குடும்பம் என்று அழைக்கப்படுமேயன்றி குலம் என்று அழைக்கப்படுவதில்லை. சில குலங்கள் மிகவும் பெரிதாகவும், பழமையானவையாகவும் இருப்பதால் அவைகள் "விதிக்கப்பட்ட" பொது முன்னோரைக் கொண்டிருப்பர்; அதாவது பொது முன்னோர் பற்றிய சான்றுகள் எதையும் கொண்டிராமல், கற்பனையான, குலத்தின் ஒருமைப்பாட்டுக்கான ஒரு குறியீடாகவே இருக்கும். சில சமூகங்களில் இந்த முன்னோர் மனிதராகக் கூட இருப்பதில்லை; ஒரு குலக்குறியாக மட்டும் இருக்கும்.

சில குலங்கள் தந்தைக்கால்வழிப்பட்டவை, அதாவது இதன் உறுப்பினர் ஆண் வழியால் உறவு கொண்டவர்கள்.

வேறு சில தாய்க்கால்வழிப்பட்டவை; இதன் உறுப்பினர் பெண் வழி உறவுமுறை உள்ளவர்கள்.

இன்னும் சில ஒரு பொது முன்னோரின், ஆண், பெண் இருவழியையும் சேர்ந்த சகலரையும் கொண்ட "இருவழி"யானவை.

ஒரு குலம், தந்தைக்கால்வழியோ, தாய்க்கால்வழியோ அல்லது இருவழிப்பட்டதோ என்பது குறிப்பிட்ட குலம் வாழும் பண்பாட்டின் உறவுமுறை விதிகளில் தங்கியுள்ளது.


ஜாதிகள் காரணப் பெயர்கள்

ஏனாதி என்பது சேனாபதியைக் குறிக்கும் சங்ககாலத் தமிழ்ச்சொல். போரில் மதிலின்மீது ஏறுதல் ‘ஏணி’ எனப்படும். இதனைத் தொல்காப்பியம் “மடையமை ஏணிமிசை மயக்கம்” எனக் குறிப்பிடுகிறது. இது உழிஞைத்திணையின் துறைகளில் ஒன்று.
ஏ என்னும் சொல் அம்பைக் குறிக்கும்.
ஏ+ஆதி=ஏனாதி. இதில் ‘ன்’ என்பது சாரியை.
ஆ+நிரை=ஆனிரை என வருவதை இதனோடு ஒப்பிட்டு உணர்ந்துகொள்ளலாம்.
இவற்றைப்போலக் கா என்பது கான் என்றும், ஊ எனபது ஊன் என்றும், மா என்பது மான் என்றும், தே எனபது தேன் என்றும் வருவனவற்றையெல்லாம் இங்குப் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம்.
வில்லாண்மையில் சிறந்தவன் என்னும் பொருளில் இந்த ஏனாதி என்னும் பட்டம் சங்ககால மன்னர்களால் வழங்கப்பட்டது. ஏனாதி திருக்கிள்ளி, சோழிய ஏனாதி திருக்கண்ணன் ஆகியோர் ஏனாதி பட்டம் பெற்ற படைத்தலைவர்கள்
காவிதி என்பது சிறந்த உழவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டம்.
நாயகன் என்பது சிறந்த கடல்வணிகனுக்கு வழங்கப்பட்ட பட்டம்.
எட்டி என்பது சிறந்த உள்நாட்டு வணிகர்களுக்கு வழங்கப்பட்ட பட்டம். இது இக்காலத்தில் செட்டி என மருவியுள்ளது.
எட்டி < செட்டி என்பது போல ஏனாதி < சேனாதி, சேனாபதி என்னும் மரூஉ தோன்றியுள்ளது.
செட்டி
பெயர் விளக்கம் - பெரும் பொருளீட்டி நாட்டிற்கு நன்மை செய்த வணிகர் தலைவர்க்குப் பண்டையரசர் அளித்த பட்டம் எட்டி என்பது.எட்டுதல் - உயர்தல். எட்டம் - உயரம். எட்டு -எட்டி = உயர்ந்தோன். பரம + எட்டி = பரமேட்டி (எல்லார்க்கும் மேலாக வுயர்ந்த இறைவன்) - மரூஉப்புணர்ச்சி. எட்டி - செட்டி. வடநாட்டு மொழிகளில் எகரக் குறிலின்மையால், செட்டி என்பது சேட்டி -சேட் எனத் திரிந்தது.

பல்வேறு வாணிக வகுப்பார், செட்டி என்பதைப் பட்டமாக மட்டுமன்றிக்குலப் பெயராகவும் கொண்டுள்ளனர்.
(1)
வெள்ளாளஞ் செட்டி (வேளாண்குல வாணிகன்).
 (2) வாணியச் செட்டி.
தொழில் - செக்காட்டி எண்ணெய் விற்றல்.

(3)
நாட்டுக் கோட்டைச் செட்டி
     
தொழில் - வட்டிக்குப் பணம் கொடுத்தல்.

(4)
நகரத்துச் செட்டி (ஆயிர வணிகர்) 

(5)
காசுக்காரச் செட்டி.
     தொழில் - பொன்மணி வாணிகம், காசுமாற்று.

(6)
பேரிச் செட்டி.
தொழில் - ஊரூராகச் சென்று பேரிகை கொட்டிப் பண்ணியம் விற்றல்.




(7) 
கரையான் செட்டி-(பட்டணவன், பரவன்) 
தொழில் - கடல் வாணிகமும் மீன் வாணிகமும்.

(8)
மளிகைச் செட்டி. 
தொழில் - பலசரக்கு விற்பனை.

செம்படவன்
தொழில் - ஆறு குளம் ஏரிகளில் மீன்பிடித்தல், கடல்மீனும் கருவாடும் விற்றல்,  ஓடமும் பரிசலும் விடுதல்.
தலைவன் பட்டம் - நாட்டான்,நாட்டாண்மைக்காரன்.
குலப்பட்டம் - நாட்டான், கவுண்டன்,மணியக்காரன், பகுத்தார், பிள்ளை.
பயிரிடும் சிலர் குக வெள்ளாளர் எனப்பட்டனர்.

தேவடியாள்
தொழில் - கோவில் தொண்டும்பரத்தைமையும்.
வகைகள் - தேவகணிகையர், நேர்ந்து கொண்டோர், வறுமை யால் அடிமைப்பட்டோர், குலவழக்கத்தால் ஆனோர், ஆரியப் பூசாரியரால் வேண்டப்பட்டோர், இவ்வகையாரின் வழியில் வந்தோர்.
தேவனுக்கு அடியாள் என்னும் சிறந்தபெயர் ஒழுக்கக் கேட்டால் இன்று இழிவடைந்துள்ளது.

பண்டாரம்
பெயர் விளக்கம் - பண்டாரம் = கருவூலம் போன்ற உயர் பொருள் பேரறிஞன்.
பிரிவு - வெள்ளாளப் பண்டாரம் (கோவிற் பண்டாரம், மடத்துப் பண்டாரம், ஆண்டிப்பண்டாரம்), பள்ளிப் பண்டாரம், பள்ளர் பண்டாரம், வள்ளுவப் பண்டாரம் (பறையர் குரு).

பணிக்கன்
பெயர் - இல்லத்துப் பிள்ளை.
தொழில் - நெசவும் வாணிகமும்.
பிரிவு - பல புறமண இல்லங்கள்.
பட்டம் - பணிக்கர்.

பணிசெய்வோன் (பணிசவன்)
தொழில் - சாவறிவித்தலும் தாரை ஊதுதலும் இரத்தலும் (சேலம்).
கோவிலில் இசைக்குழல் ஊதுதலும் நட்டுவமும் (திருநெல்வேலி).
பிரிவு - வலங்கை, இடங்கை.
பட்டம் - புலவன், பண்டாரம், பிள்ளை,முதலி.

பரத்தை
பெயர் - விலைமகள், பொதுமகள், வரைவின் மகள், இராக் கடைப் பெண்டு.
வகை - இற்பரத்தை, சேரிப்பரத்தை.

பரிவாரம்
வந்தவழி - முக்குலத்தோர் கலப்பு.
தொழில் - வீட்டுவேலை செய்தல், மீன்பிடித்தல்.
பிரிவு - சின்ன வூழியம் ,பெரிய வூழியம் என்னும் ஈரகமணப் பிரிவுகள்.
பட்டம் - மணியக்காரன், சேர்வைக்காரன், ஊழியக்காரன்.

ஊராளி
தொழில் - பெரும்பாலும்பயிர்த்தொழில்.
பிரிவு - ஏழ் அகமண நாடுகள். கரை அல்லதுகாணியாட்சி என்னும் புறமண   உட்பிரிவுகள் உண்டு.
பட்டம் - கவுண்டன்.

ஓதுவார்
தொழில் - சிவன் கோவிலில் பூசைசெய்தல்.
இனப் பிரிவு - ஓதுவார், பண்டாரம்,குருக்கள், புலவர்.

கடசன்
தொழில் - கூடை முடிதல்,சுண்ணாம்புக்கல் சுடுதல்.
பிரிவு - பட்டங்கட்டி, நீற்றரசன்என்னும் அகமணப் பிரிவுகள்.
பட்டம் - பட்டங்கட்டி, கொத்தன்.

கணக்கன்
தொழில் - ஊர்க்கணக்கு எழுதுதல்.
பட்டம் - பிள்ளை.

கணிகை (பெண்)
தொழில் - நாடக வரங்கிலும் கோவிலிலும் நடஞ்செய்தல்.
பிரிவு - நாடகக் கணிகை, தேவகணிகை.

கள்ளன்
பெயர் விளக்கம் - வேற்று நாட்டுஆநிரைகளைக் (பசுக்கூட்டங்களைக்) களவில் கவருமாறு, சோழ வேந்தரால்ஆளப்பட்ட பாலைநிலத்து வெட்சி மறவர் கள்ளர்அல்லது கள்வர் எனப்பட்டனர்.
தொழில்-பண்டைநாளில் போர்த்தொழில். இன்று பயிர்த் தொழிலும் கல்வித் தொழிலும்.
பண்டை இடம் - சோழநாடு.
பிரிவு-மேல்நாடு சிறு குடிநாடு முதலிய பத்து அகமண நாடுகள் (மதுரை), பதினால் நாடுகள் (சிவகங்கை). வகுப்பு, தெரு, கரை, கிளை என்பன நாட்டின் புறமண உட்பிரிவுகள்.
தலைவன் பட்டம்-அம்பல(க்)காரன், நாட்டான், இராசாளி
குலப் பட்டம்- நாட்டார், வன்னியன், பிள்ளை, அம்பலகாரன், சம்புவராயன், வாண்டையார், சேர்வைகாரன், சோழகன் முதலியன.

குசவன்
தொழில் - மட்கலம் வனைதல்.
பட்டம் - வேளான், செட்டி, உடையார்,பிள்ளை.

குடிமகன்
தொழில்- பெரும்பான்மை மயிர்சிரைத்தலும் வெட்டுதலும், சிறுபான்மை மருத்துவமும்அறுவையும் (Surgery).
பிரிவு - தீண்டுவான், தீண்டான்.
பட்டம் - பண்டிதன்.

குறவன்
தொழில் - வேட்டையாடல், கூடைமுறம்முடைதல், உப்பு விற்றல், மருத்துவஞ் செய்தல்,திருடல்.
பெண்களின் தொழில் - குறிசொல்லுதல், பச்சை குத்துதல்.
பிரிவு - ஊர்க்குறவன், மலங்குறவன், நாடோடி.
நாடோடிகள்-காளிக்கோட்டம் வரை பல்வேறு நாடு சென்று,அந்த அந்த  நாட்டு மொழி பேசி, வெவ்வேறு பெயர் கொண்டு, வேட்டை மருத்துவம் களவு ஆகிய தொழில்செய்பவர்.
குருவிக்காரன் அல்லது நரிக்குறவன் தமிழ் மராட்டி இந்துத்தானி ஆகிய மும்மொழி பேசுபவன்.
குலப்பட்டம் - சேர்வைகாரன், பிள்ளை, கவுண்டன் முதலியன.

கைக்கோளன்
பெயர் - கைக்கோளன் (தமிழ்நாட்டின் நடுபகுதி தென் பகுதியும்).
செங்குந்தன் (தமிழ்நாட்டின் வடபாகம்).
கையிற் கோல் (நெசவுக் குழல்) கொண்டவன் கைக்கோளன்.
கோலன் - கோளன். குழல்-கோல். கையில் செங்குந்தம் பிடித்திருந்த போர்ப்படையினர் வழிவந்தவர் செங்குந்தர்.
தொழில் - நெசவு.
பிரிவு (சில இடங்களில்) - சோழியன், இறாட்டு, சிறுதாலி, பெருந்தாலி, சீர்பாதம், சேவகவிருத்தி.

நாட்டுப்பிரிவு-72 நாடு.
வழக்கம் - ஒவ்வொரு குடும்பமும் ஒருபெண்ணைக் கோவிலுக்குத் தேவ கணிக்கையாக விடுதலும், அவளொடு செல்வ அல்லது ஏழைப் பிராமணன் கூடுதலும். இவ் வழக்கம் இப்போது நின்றுவிட்டது.


கொல்லன்
வகையும் தொழிலும் - ஐங்கொல்லர்(ஐங்கம்மாளர்).
மரக்கொல்லன் - தச்சன்.
கற்கொல்லன் - கற்றச்சன், கம்மியன்.
பொற்கொல்லன் - தட்டான்,கம்மாளன்.
செப்புக் கொல்லன் - கன்னான்.
இருப்புக் கொல்லன் - கருமான்(கருமகன்), கொல்லன்.

முதன் முதல் தோன்றியவன் மரக்கொல்லனே. ஓரறிவுயிருள்ள மரத்தை வெட்டிக்கொல்வதால், அவன் கொல்லன் எனப்பட்டான்; அவன் தொழில் கொல் எனப்பட்டது. முதல் காலமாகிய கற்காலத்தில், மரத்தினாலும் கல்லாலுமே வீடு கட்டப்பட்டது. அதன் பின்னரே பொன்னும் செம்பும் உறையும் இரும்பும் கண்டுபிடிக்கப்பட்டன.
தலைவன் பட்டம் - நாட்டாண்மைக்காரன், கருமத் தான் (காரியத்தன்).
குலப்பட்டம் - நயினார், பத்தன், ஆச்சாரி(ஆசாரி) என்பது பிராமணரொடு போட்டியிட்ட பிற்காலத்து ஆரியச் சொல்.

கோலியன்
தொழில் - நெசவு
பிரிவு - நாடுகள் என்னும் பெரும்பிரிவும் குப்பங்கள் என்னும் சிறு பிரிவும்.
பட்டம் - 'ஈசன்' என்னும் வடசொல் அடைமொழி.

சவளக்காரன்
தொழில் - ஓடம் விடுதல், பயிர் விளைத்தல், இசைக்குழல் ஊதல், ஈட்டிப் போர்புரிதல், தாதுக்கனி தோண்டுதல்.
பட்டம் - படையாட்சி (பயிர்த்தொழிலாளர்) , அண்ணாவி (இசைத்தொழிலாளர்).

சாயக்காரன்
தொழில் - சாயங் காய்ச்சுதல்.

சாலியன்
தொழில் - நெசவு.

பிரிவு - 24 புறமணவீடுகள்.

பட்டம் - அடவியார்.

சான்றான் (சாணான்)
பெயர்: சான்றோர் = போர்மறவர்.
சான்றோர்-சான்றார்
தொழில் - கள்ளிறக்குதல், கருப்பட்டி காய்ச்சுதல், வாணிகம் செய்தல், குடிக்காவல், படைக்கலம் பயிற்றல்.
ஊர்த்தலைவன் பட்டம் - நாட்டாண்மை.
குலப்பட்டம்-நாடார்,  சேர்வைகாரன். முக்குந்தன்.

சிங்கன்
தொழில் - வேட்டையாடல்.




ஆரிய வைசியர்களின் குலதெய்வம்

கன்னிகா பரமேஸ்வரி

கன்னிகா பரமேஸ்வரி  ஆரிய வைசியர்களின் குலதெய்வமாக விளங்குகிறாள்.
இந்த அம்மனின் அவதார நன்னாள் வைகாசி தசமி.
கயிலையில் பார்வதியும் பரமேஸ்வரனும் தங்கமயமான மாளிகையில் ஆனந்தமாக இருந்து ஆன்மாக்களை ரட்சித்து வரும் வேளையில், மகேஸ்வரனின் தலைவனான நந்திகேஸ்வரன் கங்கையில் நீராடப் புறப்பட்டார். அருகிலிருந்த சமாதி முனிவரிடம், தான் வரும்வரை கயிலை வாயிலைக் காவல் புரியுமாறும்; யார் வந்தாலும் அனுமதிக்க வேண்டாம் என்றும் கூறிச் சென்றார்.
அப்போது பார்வதி – பரமேஸ்வரனை தரிசிக்க துர்வாச முனி அங்கு வந்தார். காவல் நின்ற சமாதி முனிவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் கோபமடைந்த துர்வாசர் சமாதி மகரிஷியை மானுடனாகப் பிறக்கும்படி சாபமிட்டார். (அதன்படி ரிஷி பெனுகொண்டா நகர மன்னன் குஸ¤மரேஷ்டியாகப் பிறந்து ஆண்டு வந்தார்.)
கங்கையில் நீராடித் திரும்பிய நந்தி பரமேஸ்வரன் காலில் விழுந்து வணங்கினார். இதைப்பார்த்த பார்வதி, நந்தி தன்னை அலட்சியம் செய்துவிட்டதாக நினைத்து கோபம் கொண்டாள். உடனே நந்தியைப் பார்த்து, ‘நீ பூவுலகில் மானுடனாகப் பிறப்பாய்’ என சாபமிட்டாள்.
எந்தத் தவறும் செய்யாத தனக்கு இப்படி ஒரு சாபமா என எண்ணி வருந்திய நந்தி, சிவபெருமானிடம் தானும் சாபம் தர வரம் கேட்டுப் பெற்றார். பின்னர் பார்வதியைப் பார்த்து, ‘தேவி தாங்கள் பூவுலகில் பெண்ணாக அவதரித்து, கடைசிவரை கன்னியாகவே இருந்து அக்னிப் பிரவேசம் செய்து கயிலை அடைவீர்கள்’ என சாபமிட்டார் நந்தி.
பெனுகொண்டா மன்னர் குஸ¤மரேஷ்டி (சமாதி முனிவர்) புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். அதனால் அவர் மனைவி குஸ¤மாம்பிகைக்கு பார்வதியும் நந்தியும் இரட்டைப் பிள்ளைகளாக அவதரித்தனர். ஆண் குழந்தைக்கு (நந்தி) விருபாக்ஷன் என்று பெயர் பெண் குழந்தைக்கு (பார்வதி) வாசவாம்பாள் என்று பெயர். இவர்கள் இருவரும் சீரும் சிறப்புமாக வளர்ந்தனர். குரு பாஸ்கராச்சாரியரே வியப்படையும்படி சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்றனர். வளர்ந்து பருவம் அடைந்தனர்.
முன்னமேயே சமாதி முனிவரிடம் சாபம் பெற்ற கந்தர்வன் விஷ்ணுவர்த்தன் என்ற பெயரில் பக்கத்து நாட்டை ஆண்டு வந்தான். ஒருமுறை அவன் பெனுகொண்டா வந்து குஸ¤மரேஷ்டி மன்னன் அரண்மனையில் தங்கியபோது அழகிய கன்னியான வாசவியைக் கண்டான். அவளிடம் மனதைப் பறிகொடுத்த அவன் திருமணம் செய்துகொள்ள பெண் கேட்டான்.
குஸ¤மரேஷ்டி வைசிய தர்மப்படி மன்னனுக்கு பெண் தர இயலாமையை எடுத்துக் கூறினார். கோபமடைந்த விஷ்ணுவர்தன் வன்முறையைக் கையாள முயல, பயந்த மன்னன் தன் குலத்தாருடன் ஆலோசித்து பதில் சொல்வதாகக் கூறி சமாதானப்படுத்தி அனுப்பினார்.
18 நகரங்களிலிருந்து 714 கோத்திரத்தார் மன்னர் அழைப்பினால் வந்து சேர்ந்தனர். நகரேஸ்வரர் ஆலயத்தில் உள்ள வைசிய மகா சபையில் கூடினர். பிரச்சினையைப் பற்றி ஆலோசித்தனர். பலர் உடன்பட்டனர். சிலர் உடன்படவில்லை. 612 கோத்திரக்காரர்கள் பெண் கொடுக்கலாம் என்றனர். 102 கோத்திரக்காரர்கள் கொடுக்க வேண்டாம் என்றனர். அதனால் கோபமடைந்த 612 கோத்திரக்காரர்கள் (இவர்களை பெனு கொண்டாவில் நெய் செட்டு (நெய் செட்டி) என்று அழைப்பர்) நாட்டை விட்டு வெளியேறினர்.
இவ்வளவு குழப்பமும் தன்னால் வந்ததுதானே என எண்ணிய வாசவி இதற்குத் தானே பரிகாரம் செய்ய எண்ணி தீக்குளிக்க முடிவெடுத்தாள். அவள் கட்டளைப்படி நகரேஸ்வரர் ஆலயத்தின் முன் அக்னி குண்டம் அமைக்கப்பட்டது. அதில் வாசவி அக்னிப் பிரவேசம் செய்தாள்.
அவளுடன் 102 கோத்திரக்காரர்கள் தங்கள் குழந்தைகளை மட்டும் விட்டுவிட்டு அக்னிப் பிரவேசம் செய்து கயிலை அடைந்தனர். (இவர்களை எண்ணெய் செட்டு (எண்ணெய் செட்டி (என பெனுகொண்டாவில் அழைப்பார்கள்.) மேற்படி செய்திகளைக் கேள்விப்பட்ட உடனேயே விஷ்ணுவர்த்தனின் தலை சுக்குநூறாக வெடித்தது. அவன் அழிந்தான்.
அவன் மகன் ராஜராஜேந்திரன் தன் தந்தை தவறு செய்ததால் இப்படி இறந்துவிட்டாரே என வருந்தினான். பிராயச்சித்தமாக தன் அரசு முழுவதையும் வைசியர்களுக்கு காணிக்கையாக்கிவிட்டு மன்னிப்பும் கேட்டான். அவர்கள் அவன் ராஜ்ஜியத்தை ஏற்கவில்லை. அப்போது வாசவி அக்னிக் குண்டத்தினின்று அம்பிகையாகத் தோன்றி மன்னன் மகனை ரட்சித்தாள். பின் தன்னுடன் அக்னிப் பிரவேசம் செய்த நல்லவர்களை வாழ்த்தினாள்.
‘இன்று முதல் நீங்கள் (102 கோத்திரக்காரர்கள்) பொன், புகழ், கல்வி உள்ளிட்ட சம்பத்துக்கள் அனைத்தையும் பெற்று குறைவின்றி வாழுங்கள்’ என வரமளித்தாள். அதன்படி வாழ்ந்து
, ஆண்டு தோறும் தங்கள் குலதெய்வமான வாசவியின் அவதார நன்னாளையும், அக்னிப் பிரவேசத்தையும் அதிவிமர்சையாக தங்கள் ஆலயங்களில் கொண்டாடி வருகின்றனர்.
பெனுகொண்டாவில் ஆயிரம் கால் மண்டபம்போல் அமைந்த தூண்களில், அம்மனுடன் ஐக்கியமான 102 கோத்திரத்தார்களின் வரலாறு அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளது.
இதுபோல் புதுச்சேரி காந்தி வீதி சந்திப்பில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன்ஆலய முன்மண்டபச் சுவர்களின் வாசவியின் வரலாற்றை வண்ணச் சித்திரமாகத் தீட்டியுள்ளனர்.

வன்னிய புராணம்

வன்னிய புராணம் என்பது ஸ்ரீ வீர உருத்ர வன்னிய மகாராசாவின் தோற்றத்தைப் பற்றி கூறும் நூல். இந்நூல் சுந்தர பாண்டிய மன்னரின் முன்னிலையில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1216-1238 இது எழுதப்பட்டது வடமொழியில் எழுதப்பட்ட நூலான “அக்னி” அல்லது “அக்னேய புராணத்தில்“ இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.
அக்னி புராணம் இந்து மதத்தின் 18 புராணங்களில் ஒன்றாகும். இந்த புராணத்தில் வரும் செய்திகள் சீர்காழியின் அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவிலின் கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளன. வீர உருத்ர வன்னிய மகாராஜா, சம்பு முனிவர் நடத்திய வேள்வியில் பிறந்ததைப் பற்றி கூறுவதால் இந்நூல் சம்பு மைந்தர் காப்பியம் என்றும் வன்னியர் புராணம் என்றும் அழைக்க பெற்றது.
வன்னி என்றால் அக்னி எனப் பொருள்படும். இந்த உருத்ர வன்னியரின் வழி வந்தவர்கள் வன்னியர் என்றழைக்கப்படுகின்றனர்.


தூர்வாச முனிவருக்கும் கஜமுகிக்கும் இரண்டு அசுர குழந்தைகள் பிறந்தனர். அவர்களின் பெயர் "வில்வலன்" மற்றும் "வாதாபி". இவர்களின் தாயாரான கஜமுகி என்பவள் முருகப்பெருமானால் வதம் செய்யப்பட்ட சூரபத்மனின் இளைய தங்கை ஆவாள்.
வில்வலனும் வாதாபியும் அகத்திய முனிவரை துன்புறுத்த ஆரம்பித்தனர். இதனால் கோபம் அடைந்த அகத்தியர் வில்வலனை விழுங்கி விட்டார். உடனே வாதாபி சிவனை நோக்கி தவம் இருந்து பல சக்திகளையும் பெற்றான். அந்த வலிமையின் மூலம், தெற்கு கடற்கரையின் மையப் பகுதியில் அமைந்திருந்த ரத்னபுரியை அரசாள ஆரம்பித்தான். பின்னர் மாயனின் மகளான சொக்க கன்னியை மனந்தான். வாதபி செய்யும் அனைத்து காரியங்களுக்கும் அசுர குருவான சுக்ராசாரியர் துணை இருந்தார். பின்னர் வாதாபி தேவர்களை மிகவும் துன்புறுத்தத் தொடங்கினார். இதை கண்ட நாரதர், சிவபெருமானிடம் தேவர்களின் இன்னல்களைக் கூறினார். அதே சமயம் தேவர்களை காக்க சம்பு முனிவர், சிவபெருமானை நோக்கி வேள்வி ஒன்றை நடத்தினார். அப்பொழுது சம்பு முனிக்கு சிவபெருமான் அருள் பாவித்து, தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஒரு நெருப்புத்(வன்னி) துளியை அந்த வேள்வியில் விழச் செய்தார். விழுந்த அந்த நெருப்பிலிருந்து வெள்ளைக் குதிரையில் கையில் வாளுடனும், தலையில் கிரீடத்துடனும் ஒரு வீரன் வந்தான். அவன் “ஸ்ரீ வீர உருத்ர வன்னிய மஹாராஜா” என்றழைக்கப்பட்டான்.
சிவபெருமானும், தாய் பார்வதியும் தேவேந்திரனின் இரண்டாம் மகளான மந்திர மாலையை திருமணம் செய்து வைத்தார்கள். மந்திர மாலை என்பவள் முருகப்பெருமானின் மனைவியான தெய்வயானியின் தங்கையாவாள். இவர்களுக்கு நான்கு வீர ஆண் மகன்கள் பிறந்தார்கள். அவர்களின் பெயர் “கிருஷ்ண வன்னியர், பிரம்ம வன்னியர், அக்னி வன்னியர், சம்பு வன்னியர்“ என்பனவாகும். இவர்களுக்கு காந்தா(சுஷீலா) என்னும் துறவியின் நான்கு மகள்களையும் திருமணம் செய்தார்கள். அவர்களின் பெயர் “இந்திராணி , நாரணி ,சுந்தரி ,சுமங்கலி ” என்பனவாகும்.

அசுரனுடன் போர்

சிவபெருமானின் அறிவுரைப்படி அசுரன் வாதாபியை வதம் செய்ய உருத்ர வன்னியர், சிவபெருமான் அளித்த தம் படையுடன் தெற்கு நோக்கி சென்றார். அங்கே உள்ள துர்க்கையின் கோவிலுக்கு சென்று, போரில் தமக்கு துணையாக இருக்குமாறு வணங்கினார். அதற்கு ஆசி தரும் விதமாக, துர்க்கையின் பூதப் படையும் வன்னியருடன் வந்தது. அந்தப் படையையும் அழைத்துகொண்டு ருத்ர வன்னியர் கடற்கரையை நெருங்கும் போது, கடல் தானாக வழி விட்டது. அப்பொழுது அவர்களுடன் சென்ற ஒரு நாயால், அந்த கடற்கரையை தாண்ட இயலவில்லை. அதனால் அந்த நாய் மீண்டும் வன்னியரின் அரண்மனைக்கே திரும்பியது .
உருத்ர வன்னியரும் அவரது படையும் ரத்னா புரியை அடைந்த உடன், அசுரன் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு தர எண்ணினார் வன்னியர். நாரதரை அசுரன் வாதாபியுடன் சமாதானம் பேச அனுப்பினார். ஆனால் அது தோல்வியிலே முடிந்தது. அதன் விளைவு, வன்னியர் படைக்கும் அசர படைக்கும் மிகப்பெரிய போர் உருவாயிற்று. அசுரர்களின் குலதெய்வமான காளி அம்மன், அசுரர்களுக்கு துணையாக இருந்ததால் மிக உக்கிரமாக நடந்த அந்தப் போரின் முடிவில், ருத்ர வன்னியரின் கையால் அசுரன் வாதாபி கொல்லப்பட்டான். பெண்கள் உட்பட அனைத்து அசுரர்களும், வன்னியர் படையால் வதம் செய்யப்பட்டனர் . இருப்பினும் சுக்ராசாரியாரின் யோசனைப்படி, நான்கு அசுரப் பெண்கள் மட்டும் மனித வடிவில் இருந்தனர். இவர்களை கண்ட வன்னியர்கள், இந்த பெண்கள் மனித குலத்தவர்கள் என்று நினைத்து வன்னியர்கள், அவர்களை வதம் செய்யாமல் தங்களோடு தம் அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர்.
போர் முழுமையாக முடிந்தவுடன், துர்க்கையை தரிசித்து விட்டு ருத்ர வன்னியரும் அவரது படையும் தமது இருப்பிடத்திற்கு வந்தனர். தம் இருப்பிடத்திற்கு வந்த உருத்ர வன்னியர் அதிர்ச்சிக்கு உள்ளானார். கடலைத் தாண்ட முடியாமல் வீட்டிற்கு வந்த நாயைக் கண்ட உருத்ர வன்னியரின் மருமகள்கள், போரில் வன்னியர் படை வீழ்ந்தது என நினைத்து தங்கள் கணவர்மார்களும் மடிந்திருப்பர் என்று நினைத்தும் தீயை மூட்டி அதில் உடன்கட்டை ஏறித் தங்கள் உயிரை மாய்த்து கொண்டனர். பிறகு உருத்ர வன்னியரின் நான்கு மகன்களும், தாங்கள் அழைத்து வந்த மனித உருவில் இருந்த அந்த நான்கு அசுர பெண்களையும் காந்தர்வ திருமணம் செய்து கொண்டு, அவர்களோடு வாழ ஆரம்பித்தனர்.

வன்னியர்கள் ஆளும் நிலப்பகுதி

சிவபெருமானும், நாராயணனும் உருத்ர வன்னியரிடம் “சம்பு பகுதியை” ஆட்சி செய்யுமாறு கூறினர். அதுபோல வடக்கே “பாலாறு” வரை பிரம்ம வன்னியரிடமும், ”பெண்ணையாறு” வரை கிருஷ்ண வன்னியரிடமும், அங்கிருந்து வடக்கே “காவேரி” வரை சம்பு வன்னியரிடமும், தென்மேற்கு பகுதியை அக்னி வன்னியரிடமும் ஆட்சி செய்யுமாறு கூறினர். அதன் பிறகு, உருத்ர வன்னியர் மற்றொரு மகனை பெற்றார். அவர் பெயர் “சந்திர சேகர மகாராஜன்”. உருத்ர வன்னியர் தம் ஆட்சி பொறுப்பைத் தமது மகன் சந்திர சேகர மகாராஜனிடம் கொடுத்து விட்டு, தேவேந்திரனின் அழைப்பை ஏற்று இந்திரலோகத்திற்குச் சென்றார்.

மக்கள் பண்பாட்டில் வன்னிய புராணம்

வாதாபி சூரனை அழிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட வன்னிய புராணம் மறுபுறம் வன்னியர்களிடையே கதையாக பரவியிருந்தது. வன்னியர்களின் தலைவன் வீர வன்னிய ராசன் வாதாபியை அழிப்பதற்காக சிவனால் தோற்றுவிக்கப்பட்டவர். வாதாபி அரக்கனை அழிக்கப் புறப்படும்போது அவருடைய மனைவி மந்திரமாலா போரின் விளைவு என்னவாகுமோ என கவலைப்படுகிறாள். அதற்கு வன்னியராசன் "என்னுடன் நாய் வருகிறது. நான் போரில் இறந்தால் நாய் திரும்பிவரும், வீட்டில் ஏற்றப்பட்ட காமாட்சி விளக்கு அணையும், மல்லிகைப் பூ வாடும்" என்று சொல்லிவிட்டு செல்கிறார். வன்னியராசன் செல்லும் வழியில் ஆறு குறுக்கிடுகிறது. அவர் ஆற்றைக் கடந்து சென்றுவிடுகிறார். ஆனால் நாய் கடக்க முடியாமல் திரும்பி விடுகிறது. நாயைப் பார்த்த மந்திரமாலா கணவர் இறந்துவிட்டதாகக் கருதி தாலியை அறுத்துவிடுகிறாள். வீட்டில் விளக்கு அணையாததையும், மலர் வாடாததையும் அவள் கவனிக்கவில்லை.
போரில் வெற்றிபெற்று திரும்பும் வீரவன்னிய ராசன் தன் மனைவி விதவைக் கோலத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். நடந்ததை அறிந்து மீண்டும் தாலி கட்டுகிறான். இப்படி தாலியை அறுத்துக்கட்டக்கூடிய பழக்கம் வன்னியர்களிடையே இருக்கிறது. இன்றைக்கும் ஆடிப்பெருக்கு அன்று தாலியை அறுத்துக்கட்டும் சடங்கை பல வன்னியர்கள் செய்கின்றனர். இக்கதை ஒரு சில மாற்றங்களுடன் வன்னியக் கூத்து என்ற பெயரில் கிராமப்புறப்பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

பல்லவரும் வன்னியரும்

தமிழ்நாட்டின் மக்கள் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடிக்கும் ஒரு நிகழ்வு சாளுக்கிய மன்னன் புலிகேசிக்கும் பல்லவர்களுக்கும் நடந்த போராகும். பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டு காஞ்சியிலிருந்து துரத்தப்பட்டான். இதற்குப் பழிவாங்க சபதமேற்ற அவனது மகன் நரசிம்மவர்மன், மக்களுக்கு போர்க்குணம் ஏற்படச் செய்யவேண்டும் என்பதற்காக பாரதம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினான் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இதன் பலனாக கி.பி.642 ஆம் ஆண்டில் புலிகேசியின் பாதாமி நகர் தாக்கப்பட்டு அவன் தோற்கடிக்கப்பட்டான் (கருநாடக மாநிலத்தில் உள்ள நகரம் - தமிழில் வாதாபி). நரசிம்மவர்மனது படைவீரர்களாக இருந்தவர்கள் வன்னியர்கள். பாதாமியை வென்ற படைக்கு தலைமையேற்ற பரஞ்சோதி என்கிற சிறுதொண்டர் வன்னியர் குலத்தைச் சேர்ந்தவர். இவரைப்பற்றி பெரிய புராணம் குறிப்பிடுகிறது. இக்கதையே வாய்மொழியாக வழங்கப்பட்டு பின்பு வன்னிய புராணம் என்ற பெயரில் வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.


குலம் தழைக்கச் செய்யும் பித்ருக்கள் ஆராதனை!
குலம் தழைக்கச் செய்யும் பித்ருக்கள் ஆராதனை! சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கோள்கள் என மிக பிரமாண்டமாகப் பரந்து விரிந்திருக்கிற இந்தப் பிரபஞ்சத்தில், நாம் வசிக்கும் இந்த உலகம் ஒரு துளி! 

நாம் எப்படி இந்த உலகுக்கு வந்தோம்? கடவுளால் படைக்கப்பட்டு! நம்மையும் இந்த உலகையும், உலகத்து மக்களையும், அண்ட சராசரங்களையும் படைத்தது இறைவன்தானே! அனைத்து இடங்களிலும், எல்லோர் வீடுகளிலும் இருந்துகொண்டு, நம்மை போஷிப்பதற்காகவே தாய்- தந்தையரைப் படைத்து, அவர்களின் மூலமாக இந்த உலகுக்கு நம்மை அருளினார் கடவுள். அதனால்தான், நம்மை இந்த உலகுக்கு வழங்கி, சீராட்டிப் பாலூட்டி வளர்த்த பெற்றோரை, 'தந்தை- தாய் பேண்’ என்றும், 'நன்றி மறவேல்’ என்றும் சொல்லி, பெற்றோரைப் பராமரிப்பதை ஓர் அத்தியாவசியக் கடமையாகப் பணித்து வைத்தது இந்து தர்மம். 

திங்கள், 16 செப்டம்பர், 2013

நெசவாளர் இனங்கள்/ Weavers

நெசவாளர் இனங்கள்/ Weavers
            
             ஆடை :- மனிதன் மாறுபட்ட தட்ப வெப்ப நிலையிலிருந்து.தன் உடலை பாதுகாக்க நினைத்த போது உடை தோன்றியுள்ளது.

    முதலில் இலைத் தலைகளையும், பின் மிருக தோல்களையும் பயன்படுத்தி உள்ளான். சிவபெருமானை தோல் ஆடையுடன் சித்தரிக்கப்பட்டுள்ள ஓவியத்தை இப்பொழுதும் காணமுடிகிறது.

    முந்தய காலத்தில் மனிதர்கள் நீண்ட முடியை வளர்த்துள்ளனர். பின் அதில் பின்னல்களை பின்னியுள்ளனர். அதன் வலிமையை பார்த்து கயிறு செய்வது உருவாகியிருக்கிறது. இதுவே நெசவு தொழிலுக்கு காரணகர்த்தாவாக அமைந்தது.

    ஆட்டின் ரோமத்திலிருந்து கம்பளி தயாரிக்கப்பட்டுள்ளது. பருத்தி, சணல், பட்டுபூச்சி ஆகிய வற்றால் நெசவு தொழில் வளர்ந்துள்ளது. விவசாய தொழிலுக்கு முற்பட்டதாக நெசவு தொழில் இருந்துள்ளது.

சணல்:- ஆப்பிக்காவிலும், எகிப்திலும், --- கி.மு. 8000 த்திலும்.
பட்டு :- சீனா மற்றும் அதை சுற்றியுள்ள நாடுகளிலும்—கி.மு.5000-3000 த்திலும்
பருத்தி;- முதலில் இந்தியாவிலும், பின் அமெரிக்காவிலும்-கி.மு.1700-1500 ல் இருந்துள்ளது.

    வியாபாரம் என்பது ஆடை தொழில்களில் தான் ஆரம்பித்திருக்கிறது. கி.மு.114 ல் பட்டு துணி வியாபாரம் மேற்கையும்,கிழக்கையும் இனைத்துள்ளது. 5000 மைல் தொலைவில் உள்ள மக்களையும் இது ஈர்த்துள்ளது.

    இந்தியாவில் பருத்தி துணியை பல வகையான சித்திர வேலைபாடுகளுடன் தயாரித்துள்ளனர். இது பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. கிரேக், ரோமன் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கி.மு.3300-2600 ல் பருத்தியையே ஆடையாக பயன்படுத்தி உள்ளனர். என்பது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    சிலந்தியை முன் காலத்தில் நெசவாளர்களின் சின்னமாக சொல்லபட்டுள்ளது. பட்டு பூச்சியை போல சிலந்தி மூலமாக நூல் எடுக்க முயற்சிக்க பட்டுள்ளது.

நெசவு;- நெசவு என்பது ஆடை தயாரிக்கும் முறை. ஆடை தயாரிக்க பொதுவாக இரண்டு விதமான நூல் வேண்டும். பாவுநூல் எனப்படும் நீள வாக்கில் வரக்கூடிய நூலும், ஊடை நூல் எனப்படும் குறுக்கு வாக்கில் வரக்கூடிய  நூலும் [warp & weft] இந்த ஊடை நூல் குறுக்கு வாக்கில் பின்னபட வேண்டும். இந்த ஊடை நூல் வித,வித மாக பின்னபடுவதில் தான் வித,வித மான வடிவங்கள் உருவாகிறது.

நெசவாளர்களின் இனம்:- இந்திய நெசவாளர்களில் பல ஜாதிக்காரர்களும், பல மதத்தை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள்..

    துளு நாட்டில் சாலியன் மரபை சார்ந்தவர்கள் பெரிய அளவில் வாழ்ந்துள்ளனர். சாலியன் என்ற வார்த்தை சிலந்தியை குறிக்கிறது. இவர்கள் நெசவாளர்களாக இருந்திருக்க வேண்டும்.

    செட்டியார்கள் துளு நாட்டிற்கு இடம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் வீரபத்திரன் என்ற கடவுளை வழிபட்டுள்ளனர். செட்டியார் என்ற வார்த்தை அர்த்தம் வியாபாரியை குறிக்கிறது. அவர்களின் இயல்பு தற்போது தழிழ் நாட்டில் உள்ள செட்டியார்களின் இயல்பை ஒத்திருக்கிறது.

    மத்திய அரசின் கணக்கெடுப்பில் நெசவை தன் குல தொழிலாக கொண்ட நிறைய இனம் இருந்திருக்கிறது. அவைகள்

1.பத்மசாலி. 2.தேவாங்கா. 3.ஜன்றா. 4.தொகட்டா. 5.தொகட்டா வீரகஸ்றியா. 6.பட்டகாரு. 7.கர்மிபக்துலா. 8.காரகால பாக்குலா. 9.சுவாகுலா சாலி. 10.நீலசாலி. 11.நலகண்டி நெஸ்சி. 12.குர்ணி. 13.குர்மி செட்டி சாலி. 14.கரிகாலா. 15.கைக்கோலன். 16.செங்குவாகன். 17.பட்டுசாலி. 18.செட்டிகார்.

1. பத்மசாலி:- ஆந்திரபிரதேசம்—தாய்மொழி தெலுங்கு, குல தெய்வம் பத்மாவதி. ஶ்ரீனிவாச கடவுளின் துணைவி.

2. தேவாங்கா:- கர்நாடகா,ஆந்திரா—தாய்மொழி கன்னடம், தெலுங்கு. சுத்தமான பருத்தி துணிகளை நெய்பவர்கள்.

3. சாலியர்/பத்மசாலியர்/செட்டியார்:- தமிழ்நாடு,ஆந்திர பிரதேசம்—தாய்மொழி தமிழ்,தெலுங்கு. இவர்கள் செயற்கை பட்டு நெசவாளர்கள்.

4. பட்டகாரு:- கேரளா—தாய்மொழி மலையாளம். மலையாளி நெசவாளர்களை சாலியன், சாலியர், சாலி என்று அழைக்க படுகின்றனர். குடும்ப பெயரை வைத்து அடையாளம் கண்டறியப் படுகின்றனர்.

5. செட்டிகார்:- கர்நாடகம்—தாய்மொழி துளு,கன்னடம். சாலியன், சாலியர், சாலி என்று இவர்கள் மலையாள நெசவாளர்களைப் போல் அழைக்கப்பட்டலும் கேரளாவில் உள்ளவர்களிடம் இருந்து பழக்கவழக்கங்களில் மாறுபட்டு பிராமின் பழக்கவழக்கங்களை ஒத்திருக்கும்.

நெசவாளர் சமூகங்கள்

தேவாங்கர் :- மிக பழமையான இனதில் ஒன்று. ஆடை இல்லாத காலத்தில் பிரம்மன், மற்றும் தேவர்களும் சிவபெருமானிடம் வேண்ட தேவர்களுக்கு ஆடை தயார் செய்து கொடுப்பதற்காக. சிவபெருமான் தன் சக்தியின் மூலம் தேவலர் என்பவரை வர வழைத்து நான்கு யுகத்தில் ஏழு அவதாரங்கள் எடுக்க செய்திருக்கிறார். அவர்களின் சந்ததிகளே தேவாங்கா இனத்தவர்கள்.

    கடவுளுக்கும், மனிதர்களுக்கும் நூல், மற்றும் துணிகளை தயாரித்து தன் ஏழு அவதாரத்திலும் தயாரித்து கொடுத்துள்ளார். மூன்று தூய்மையான பருத்திநூல் [தமிழில் - பூணூல்] இவரால் அறிமுகபடுத்த பட்டு இவரின் இனத்தவர்களும், பிராமணர், ஷத்திரியர்கள், வைஸ்சியர்கள். இவர்களும் அணிய ஆரம்பித்தனர்.

    ஆமேத நகர் அரசர் தேவாங்கர்களின் வரலாற்றை தெரிந்து அவற்றின் தத்துவங்களை பரப்பியுள்ளார்.

கோலி :- சிலந்தி என்று அர்த்தம். இவர்களை மீனவர்கள் என்றும் சொல்லுவர். இவர்களின் பழக்க வழக்கங்கள், ராஜஸ்த்தான், குஜராத், ஹிமாசல பிரதேஸ், உத்தர பிரதேஸ், ஹரியானா, பெங்கால், ஒரிசா, மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, ஆந்திர பிரதேஷ் இந்த மாநிலத்தவர்களின் நெசவாளர்களை ஒத்துள்ளது. ஆகவே இவர்களும் நெசவாளர்களே. இவர்கள் கோலி என்ற வார்த்தையை தன் பெயருக்கு முன்னும், பின்னும் இந்தியா முழுவதும் உபயோகின்றனர்.

சால்வி :- இவர்கள் பட்டு நெசவாளர்கள். இவர்கள் 12 ம் நூற்றாண்டில் கர்நாடகா, மஹாராஷ்ட்ரா விலிருந்து குஜராத்தை சுற்றியுள்ள பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர். Shal மற்றும் Sal என்றால் குஜராத்தியில் தறி என்று பொருள் படுகிறது. துணியின் பூ வேலை பாட்டிற்கு பேர் போனவர்கள்.

பட்டு நூல்காரர்/ கத்ரி :- இவர்கள் குஜராத்தின் பட்டு நெசவாளர்கள். இவர்கள் செளராஷ்ட்ரா [குஜராத்] வில் இருந்து நாயக்கர் அரசர் அழைப்பினால் மதுரை க்கு வந்தவர்கள். இவர்கள் பழமையான மொழியான செளராஷ்ட்ரியை தமிழ், கன்னடம், தெலுங்கு கலந்து பேசியுள்ளனர். இவர்கள் அதிகம் இருந்ததால் சாகித்ய அகாடமி அவர்கள் பேசிய மொழியை அங்கீகரித்து தனி மொழியாக அறிவித்துள்ளது.

செங்குந்தர் மற்றும் கைக்கோலர்கள் :- இவர்கள் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேஷ், மற்றும் ஶ்ரீலங்கா வில் இருந்துள்ளனர். இவர்கள் முதலியார் என்ற பெயரை இவர்களின் பெயருக்கு பின்னால் போட்டு கொண்டனர். முதலியார் என்பது “moodeley” என்ற சொல்லில் இருந்து வந்திருக்கிறது. Moodeley என்பது தென் ஆப்பிரிக்கா நெசவாளர்களின் பெயர் ஆகும்.

அச்சுவாரு [Acchuvaru] :- என்ற இன்த்தவர்கள் 1901 MADRAS கணக்கெடுப்பின்படி தானியம் விற்கும் ஒரியா மக்கள் என்று பதிவு செய்யப்பட்டது. ஆனால் அச்சுவாரு என்பது தறியில் அச்சு வேலை செய்யும் அச்சுபணியை குறிப்பது. கைகோல் நெசவாளரின் கிளையில் உள்ள ஜாட்டிபிள்ளை [Jatipillai] யை ஒத்துள்ளனர். ஜாட்டிபிள்ளை என்பவர்களும் துணிகள் நெய்யக்கூடிய தறியில் அச்சு வேலை செய்பவர்களே.

Talye/ Talyer, Settigars :- இவர்கள் துளுநாடு [பிரிக்க படாத கனடா] வில் நெசவு தொழில் செய்தவர்கள். துளு மொழியில் “TALIYE” என்பது சிலந்தியை குறிக்கிறது. “TA” என்ற எழுத்தை மாற்றி “SA” என்று வைத்துக் கொண்டனர். அதனால் டாலியே என்பதும் சாலியே என்பதும் ஒன்றே. அரசு பதிவின்படி இவர்களே செட்டிகார்ஸ் ஆவர். இவர்கள் தேவாங்காஸ் அமைப்பின் படியும் இருந்தனர்.

   இவர்களை சாலே, சாலி, சாலியா என்று கன்னடம், மலையாளத்தில் அழைத்தனர். குஜராத் நெசவாளர்களையும் சாலியா என்று அழைத்தனர்.

சமுதாய அமைப்பு:- ஆந்திராவில் உள்ள தேவாங்கர்கள் “மகாசபை” என்றும். கன்னட தேவாங்கர்கள் “ஆயகட்டு, கட்டமனே” என்றும் ஒரு அமைப்பை வைத்திருந்தார்கள்.
    
குரு, எஜமானன், செட்டிகார்கள், சேசராஜூ {செட்டியாருக்கு உதவி செய்பவர்}, கரனிக்கா {கணக்கு வழக்கை பார்ப்பவர்} அர்ச்சகர் {கோவில் பூசாரி} சிங்கமு/ சிங்கம் வல்லு {இறந்தவர்களின் சடங்குகளுக்கு உதவி செய்பவர்}

குரு  :- இவர் தேவாங்க கடவுளாக மதிக்கபடுபவர். இவர் வார்த்தையை மேன்மையாக கருதினர்.

செட்டிகார்ஸ் :- வரலாற்று பதிவின் படி செட்டிகார்ஸ் என்பவர்கள். கர்நாடகா, ஆந்திர பிரதேஷ் தில் உள்ள தேவாங்கா/ பத்மசாலி யில் இருந்து பிரிக்க பட்டவர்கள்.  இவர்கள் வரதட்சனை அதிகம் கேட்டதால். இவர்களை முக்கிய பகுதியிலிருந்து விலக்கினர். இவர்கள் விஜயநகர அரசரின் காலத்தில் பெரும் மதிப்புடன் வாழ்ந்தனர்.

    நெசவாளர்கள் கிராமத்திலும், நகரத்திலும் ஒற்றுமையாய் வாழ்ந்தனர். இவர்களை “கேரி” என்று கன்னடத்திலும். டேரு என்று மலையாலத்திலும் கூறினர்.

    நெசவு என்பது குடும்ப தொழிலாகவே இருந்தது. தெற்கு இந்தியாவில் இரு பிரிவாக இருந்தனர். 1. மேல் பிரிவு. 2. கீழ் பிரிவு. தேவாங்கா மற்றும் கைக்கோலரை கீழ் இனத்தார் என்றும். ஆந்திராவில் உள்ள பத்மசாலியை மேல் இனத்தார் என்றும் அவர்களே வைத்து கொண்டனர். தமிழ்நாடு வழியாக இடம் பெயர்ந்த நெசவாளர்களையும் கீழ் இனத்தார் என்றே வைத்து கொண்டனர்.

    தேவாங்கர்கள் வேறு தொழில் செய்தாலும், அல்லது நெசவு தொழில் செய்து கொண்டு வேறு இனத்தில் இருந்தாலும், இவர்களை ஒன்று கூட்டுவது இவர்களின் மொழியே. அவர்களிடையே பல பிரிவினைகள் ஏற்பட்டிருந்தாலும் இவர்களின் மொழி ஒரு கருவியாய் அமைந்திருக்கிறது.

ஆதாரம் :  வேறு ஒரு  வலை பதிவில் ஆங்கிலத்தில்  -- Hosabettu Vishwanath (Pune) என்பவர் எழுதி இருக்கிறார் . எந்த ஆதார நூலையும் போடவில்லை. நடப்பில் உள்ள விசயங்களும், நமக்கு தெரிந்த விசயங்களும் நம்ப கூடிய வகையில் இருப்பதால். பதிவு செய்யப்  பட்டிருக்கிறது. S.V. RAJA RATHINAM. KARUR.

கட்டுரையை சுட்டி காட்டியவர் :- திரு. A. தியாகராஜன் அவர்கள்.
             தமிழில்   பதிவு  செய்தது  :- S.V. ராஜ  ரத்தினம் .


பத்மசாலியர் தமிழக அரசு வெளியிட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள சாதிகளில் ஒன்று.
சாலியர், பட்டு சாலியர், பட்டாரியர், செளராஷ்டிரர்கள் வரிசையில் இடம் பெறும் இவர்கள் அச்சாதியினரைப்போலவே நெசவுத் தொழில் செய்பவர்கள். தெலுங்கினைத் தாய்மொழியாய்க் கொண்ட இவர்கள் கிருஷ்ண தேவராயர் காலத்தில் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தமிழகத்தில் நுழைந்து தமிழகம் முழுக்க பரவியுள்ளனர்.

அபயப்பிரதான ரெங்கநாத ஸ்வாமி கோவிலுக்கு பத்மசாலியர் குல மக்கள் வழங்கிய கொடிச்சீலை

பத்மசாலியர் குல மக்கள் சார்பில், 12 மீட்டர் நீளமுள்ள கொடிசீலை பராம்பரிய வழக்கப்படி, மேள, தாளத்துடன் மார்க்கண்டேயன் கோவிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. மார்க்கண்டேய மகிரிஷி கோத்திரத்தில் வந்தவர்களான பத்மசாலியர் குலத்தவருக்கு நெசவு குலத்தொழிலாகும்.இந்தியாவில் எங்கெல்லாம் பெருமாள் கோவில் இருக்கிறதோ, அங்கெல்லாம் இக்குலத்தவர் நெய்து தரும் சீலைத்துணியைதான் கொடிசீலையாக ஏற்றுக்கொள்வர். கொடிசீலையின் ஒரு மூலையில் சங்கு, சக்கர நாமத்துடன் கருடாழ்வார் திருவுருவம் வரையப்பட்டிருக்கும். 


வியாழன், 12 செப்டம்பர், 2013

கோத்திரம் என்றால் என்ன?

கோத்திரம் (Gotram)
கோத்திரம் என்றால் என்ன?
அகராதியில் இந்தச் சொல்லுக்கு வம்சம் என்று பொருள் கூறப்பட்டுள்ளது. இந்த வம்சத்தைச் சார்ந்தவர் என்பதைச் சொல்லுவதுதான் கோத்திரம். இந்தக் கோத்திரங்களின் முக்கியமானவர்களாக ஏழு ரிஷிகள் கூறப்பட்டுள்ளனர். இவர்களைக் கோத்திர பிரவர்த்தகர்கள் என்று சொல்லுவர்.

இந்த ரிஷிகளின் பெயர்கள் பின்வருமாறு
1. பிருகு 2. அங்க்ரஸர் 3. அத்ரி 4. விச்வாமித்ரர் 5. வஸிஷ்டர் 6. கச்யபர்    
7. அகஸ்த்யர்

பிரவர்த்தகர்கள்
ஒரு சில கோத்திரங்கள் ஒரு ரிஷியையும் சில இரண்டு ரிஷிகளையும் சில மூன்று ரிஷிகளையும் சில ஐந்து ரிஷிகளையும் சில ஏழு ரிஷிகளையும் பிரவரமாகக் கொண்டவை.

கோத்ரம் பிராமணாளுக்கு மட்டுமே உரியது என்பதே நடைமுறையாக உள்ளது. அவர்களே ரிஷிகளின் வம்சாவளிகள் என்பது அவர்களால் தீர்மானிக்கப்பட்ட விஷயம்.

இந்தக் கோத்திரங்கள் எல்லா இனத்தவருக்கும் உண்டு. குறிப்பாகப் பிராம்மணர்கள் இடையே இது அதிகமாகப் பழக்கத்தில் உள்ளது. கோத்திரம் தெரியாதவர்கள் சிவ கோத்திரம், விஷ்ணு கோத்திரம் என்று தங்களைச் சொல்லிக் கொள்வதும் நடைமுறையில் உள்ளது.

ஆண்களுக்கு மட்டும்தான் கோத்திரம் என்பது இல்லை. பெண்களும் தங்களின் கோத்திரத்தைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். பெண்கள் திருமணம் செய்துகொண்ட பின் கணவனுடைய வம்சத்தைச் சார்ந்தவர்களாகி, அந்த வம்ச ஸந்ததியை விருத்தி செய்பவர்கள் என்பதால் கணவனுடைய கோத்திரத்தைச் சார்ந்தவர்களாக ஆகிவிடுகிறார்கள்.
ஆண்கள் கோத்திரம் திருமணத்தால் மாறுவதில்லை. ஒரு ஆண் மற்றொரு குடும்பத்திற்குத் தத்து (ஸ்வீகாரம்) அளிக்கப்பட்டுவிட்டால் அந்த வம்சத்து வாரிசாக மாறிடுவதால் அந்தக் கோத்திரத்தைச் சார்ந்தவராகி விடுவதால் பிறந்த கோத்திரம் மாறிவிடும்.
ஆண் பெண்களுக்குத் திருமணம் நிச்சயிக்கப்படும்போது முதலில் கோத்திரத்தின் அடிப்படையிலேயே தான் செய்யப்படுகிறது. ஒரே கோத்திரத்தைச் சார்ந்த ஆணும் பெண்ணும் உடன்பிறந்தவர்கள் என்று கருதப்படுவதால் இவர்களுக்குத் திருமணம் செய்யப்படுவதில்லை. ஆணின் கோத்திரத்திற்காக அல்லது பெண்ணின் கோத்திரத்திற்காக அன்னியமான கோத்திரத்தில்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.
கோத்ர பிரவர்த்தகரின் கீழ் பல ரிஷிக்கள் கோத்திரங்கள் உள்ளன. ஆனால், ரிஷிகள் அறிந்தும் பிரவர்த்தக ரிஷி மாறுவதில்லை. பிரவர்த்தக ரிஷியின் பெயர் கட்டாயம் பிரவரத்தில் இருக்கும் என்பதால் பிரவரத்தில் உள்ள ரிஷியின் பெயர் ஆண், பெண் கோத்திரங்களில் ஒன்றாக இருந்தாலும் திருமணம் செய்வதற்கில்லை.

உதாரணத்திற்கு ஒன்றைக் காட்டலாம். ஆணின் கோத்திரம் ஓமதக்னி. பெண்ணின் கோத்திரம் கர்கிய. ஓமதகனியும், கர்கியரும் வேறு வேறு ரிஷிகள் என்றிருந்தாலும் இவர்கள் பிருகு வம்சத்தில் வந்தவர்கள் என்பதால் பிரவரத்தில் பகுதி ரிஷியின் பெயர் கட்டாயம் இருக்கும். ஆக, இந்த இரண்டு கோத்திரங்களைச் சார்ந்த ஆண் பெண்களுக்கும் திருமணம் செய்ய கோத்திரப் பொருத்தம் இல்லை.
ஆண் பெண் திருமணத்திற்குப் பார்க்கும் பத்து வித பொருத்தங்களில் முதன்மையானது கோத்திரப் பொருத்தம். இது இல்லை எனில் மற்ற எல்லா வகையிலும் நூறு சதம் சரியாகப் பொருந்தி இருந்தாலும் திருமணம் செய்வதற்கில்லை. அங்ஙனம் திருமணம் செய்வது சகோதர சகோதரிக்கு இடையே செய்த திருமணமேயாகும்.

ஆண் தன்னுடைய கோத்திரத்தைத் தெரிந்துகொள்வதுடன் தன் மனைவியின் தந்தை கோத்திரத்தையும் கட்டாயம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு
பெண்கள் உந்நதமான நிலையில் இருக்க வேண்டியவர்கள். பெண் திருமணம் ஆகிக் கணவன் வீடு வருவதையும், அவளுக்குக் கணவனின் கோத்திரமே தான் கோத்திரமாக மாறுகிறது என்பதையும் அறிவோம். ஆகவே பெண் என்ன மட்டமானவளா, ஆண் என்ன உசத்தி என்றெல்லாம் கேட்பதோடு ஆண் குழந்தை பிறந்தால் தான் வம்ச வ்ருத்தி எனச் சொல்வதையும் தவறாகவே புரிந்து கொள்கிறோம். பெண்ணில்லாமல் கருவைச் சுமக்க யாரும் இல்லை.  ஆகவே பெண் வேண்டாம் என யாருமே சொல்வதில்லை.

விஞ்ஞான ரீதியிலேயே இதற்கான பதிலைக் காண்போமா.
விஞ்ஞான முறையில் யோசித்தால் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே.  ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம்.  இது தாய் மூலம் 23 தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம்.  இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது.  தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன.  தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன.  ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும் இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டுக் கூறி உள்ளது. 

ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக் கூடாது என்பதன் காரணமும் இதை ஒட்டியே.  ஒரே கோத்திரத்தில் பிறந்த பெண்ணோ, ஆணோ ஒருவரை ஒருவர் அறியாதவர்களாகவே இருந்தாலும் அவர்கள் சகோதர, சகோதரியாகவே கருதப் படுகிறார்கள் என்பதை நம் சனாதன தர்மம் திட்டவட்டமாய்க் கூறும். ஏனெனில் பெண் குழந்தையை உருவாக்கும் x க்ரோமோசோம் இருவரிடமும் இருக்கையில் ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் மட்டும் ஆணிடம் தான் உள்ளது. பெண்ணிற்கு y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை. ஆனால் அதே ஆண் குழந்தைக்குத் தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன.  ஏனெனில் அவன் மூலம் தான் வம்சம் மீண்டும் வளரப் போகின்றது வழி வழியாக.

வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டுமே, முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத் தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டுத் தொடர்ந்து காப்பாற்றப் பட்டு வருகின்றது.  இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கின்றனர். 

இதே முப்பாட்டி, பாட்டி, மகள், பேத்தி, கொள்ளுப்பேத்தி, எள்ளுப்பேத்தி என x க்ரோமோசோம்கள் வழி வழியாக வருவதில்லை.  தன் தாயிடம் இருந்தும், தந்தையிடம் இருந்தும் x க்ரோமோசோம்கள் மகளுக்குக் கிடைக்கின்றது. ஆனால் இயற்கையின் மாபெரும் அதிசயமாக y க்ரோமோசோம்கள் பெண்களுக்குக் கடத்தப்படுவதில்லை என்பதோடு தந்தையிடம் இருந்து மகன் பெறுவதும் அவன் பரம்பரையின் y க்ரோமோசொம்கள் மட்டுமே.

ஒரு ஆணால் மட்டுமே இந்த y க்ரோமோசோம்களைத் தன் மகனுக்கு அளிக்க முடிகிறது.  பெண்ணிற்கோ எனில் ஆணின் y க்ரோமோசோம்கள் கிடைப்பதில்லை.  பெண் எப்போதும் பெண்; 100% பெண். ஆனால் ஆணோ 50% பெண் எனலாம்.  இதிலே வேடிக்கை என்னவெனில் ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று.  ஆனால் அதிலே உருவாகும் ஆண் பெண்ணை அடக்கி ஆள்கிறான் என்பதும் விந்தையிலும் விந்தை. மேலும் தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்குச் சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம். ஆகவே தான் ஏற்கெனவே பலவீனமான    y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடரக் கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப் படுகிறது.