என்னைப் பற்றி

- போடகல . R.ராமச்சந்திரன்
- 121, அண்ணாநகர், தெரு.4, பொன்னம்மாபேட்டை, சேலம்.636001. அலைபேசி எண் - 98426 82566 & 90924 53376
வியாழன், 24 ஏப்ரல், 2025
மாரியம்மன் கோவில் வரலாறு சேலம் செவ்வாய்பேட்டை தேர் நிலையத்துக்கு தென்புறம் வடபுறம் பூர்வீக குடி மக்கள் பத்மசாலியர் சமூகம் வசித்து வருகிறார்கள். ஒருகாலத்தில் மாமன் மச்சான் போடகல & காஜூல (கடாரி) கோத்திர குடும்பத்தார் இருவரும் வீட்டுசாமான் வாங்க செவ்வாய்பேட்டை சந்தைக்கு செல்வது வழக்கம். செல்லும் வழியில் ஒரு கல் காலில் இடரி விட்டது அலட்சியமாக அந்த இடத்திலேயே கல்லை வழியில் வீசிவிட்டு பயணம் சென்றனர். மற்றொரு முறை பயணம் செய்யும்போது அதேகல் அவர்கள் கால்கள் இடரிவிட்டது. அன்று இரவு அவர்கள் இருவர் கனவிலும் நான்தான் மாரியம்மாள் என்னை நீங்கள் கண்டுகொள்ளவில்லை, என்னை நட்டிவைத்து கோவில் செய்யும்படி அசரீயாக சொன்னது. அடுத்து வழக்கம்போல சந்தைக்கு செல்லும்போது அதே இடத்தில் அந்த கல் இருந்ததை கண்டார்கள். சந்தையில் பொருள் வாங்கி, பொருள் நிறைந்த கூடையில் அந்தக் கல்லை சுமந்து வந்தார்கள். வரும் வழியில் பாரம் தாளாமல் அந்தகல் கீழேவிழ கல்படுக்கைவசம் விழாமல் செங்குத்தாக நட்டிநின்றது. தகவல் – சாமிநாதபுரம், போடகல .ராஜகோபால் இன்றும் விழா துவக்கத்தில் பூஜை மரியாதைக்கு உடையவர்கள் - மாமன் மச்சான் உறவுகளுக்கு உண்டு. பழமை 1.கடாரி.K. K.சென்ராயசெட்டி (மறைவு1980) S/o..கிருஷ்ணசாமி பாகவதர்,தேவாங்கர் பிள்ளையார் கோவில் தெரு, செவ்வாய்பேட்டை,சேலம்.2/ லாங்லி ரோடு சந்து1. 2.போடகல புத்தூர் சி.முத்தியாள் செட்டி S/o.சித்தைய செட்டி லாங்லி ரோடு சந்து 1. (சமூக கோயில் அருகே) பாவ நாராயண சுவாமி தேவஸ்தானம் (மதிப்பீடாக) தாய்மாமா. மேற்கொண்டு இரு உறவுகளும் சமூக கோயிலுக்கு சொத்துக்கள் ,நன்கொடைகள் கொடுத்து அழியா புகழ் பெற்றார்கள். மாரியம்மன் கோவில் திருவிழா துவக்கத்தில் மாரியம்மன் கோவிலில் இருந்து மரியாதை நிமித்தமாக மேல வாத்தியத்துடன் 1.வீட்டுக்கு வருவார்கள். பூ பழம் சீர்வரிசியோடு வாத்தியம் முழங்க இரண்டாவது வீட்டுக்கு புறப்பட்டு அவர்களும் சீர்தட்டோடு இரு வீட்டு உறவுகளும் வாத்தியத்துடன் மாரியம்மன் கோவிலில் வந்து அடைவார்கள். அதிலிருந்து விழா தொடங்கும் . சென்ராயசெட்டி என் அம்மாவின் பெரிய அப்பா ஆவார்கள். என் சிறு வயதில் ஏற்பட்ட அனுபவம். நானும் சீர் தட்டுடன் கலந்து கொண்டு உள்ளேன். மேற்கண்ட இருவருக்கும் ஆண் வாரிசு இல்லை தகவல் - போடகல. ராமச்சந்திரன், 1952. s/o. ரங்கசாமி மேற்கண்ட சமூக கோயிலுக்கு இருவரும் உதவி தர்மகர்த்தாவாக செயல்பட்டோம். Cell.no. 9842682566 பிற்காலத்தில் 1.கடாரி கோவிந்தராஜ்,கிருஷ்ணராஜ் 2. போடா.தா.சீனிவாசன் , (குப்பு ராஜு பார்த்தசாரதி சுகுமார் ) சென்னகிருஷ்ண செட்டி தெரு, செவ்வாய்பேட்டை, சேலம்.2.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக