என்னைப் பற்றி

எனது படம்
121, அண்ணாநகர், தெரு.4, பொன்னம்மாபேட்டை, சேலம்.636001. அலைபேசி எண் - 98426 82566 & 90924 53376

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

சாதி, குலம் என்றால் என்ன ?

சாதியென்றால் என்ன?
வருணாச்சிரம தர்மத்தின் ஒரு விரும்பத் தகாத வெளிப்பாடு இது எனக் கருதுகின்றேன்! சமுதாய அமைப்பில், ஆரம்ப காலத்தில் தொழில் ரீதியாக இது ஆரம்பிக்கப் பட்டிருக்கலாம். இதன் பின், பிராமணர்கள்,இதை வேதங்களுடன் தொடர்பு படுத்தி,

பிரமாவின் சிரசிலிருந்து 'பிராமணர்கள்' தோன்றியதாகவும்,
புயங்களில் இருந்து 'சத்திரியர்கள்' தோன்றியதாகவும்,
 இடுப்புப் பாகத்திலிருந்து வேளாளர்கள் தோன்றியதாகவும்,
பாதத்தில் இருந்து, 'சூத்திரர்கள்' தோன்றியதாகவும் கூறினார்கள்!

சூத்திரர்கள், அறிவு சம்பந்தம்மான எதற்கும் அருகதையில்லாதவர்கள் எனவும் கருதினார்கள்! பொதுவாக, இவர்கள் தீண்டத்தகாதவர்கள் என வகைப் படுத்தப் பட்டார்கள்! இவர்கள் வேதம் படிக்க முனைந்தால் இவர்களின், காதுகளில் காச்சிய 'ஈயம்' ஊற்றப் பட்ட சம்பவங்களும் நடந்திருக்கின்றன! இவர்கள் மேலே வரக்கூடாது, என்பதற்காக, இவர்களுக்கு 'அறிவு' சம்பந்தமான எல்லாமே மறுக்கப் பட்டது!      

நான்கு நாயன்மார்களில், திருநாவுக்கரசர் மட்டும் பிராமணர் அல்லாதார்!

குலம் என்றால் என்ன
குலம் என்பது உறவுமுறையாலும், வம்சாவழியாலும் இணைக்கப்பட்டுள்ள ஒரு மக்கட் குழுவாகும். பொதுவாகக் குலம் ஓரளவு பெரியது. குலமொன்றின் உறுப்பினர்கள், பல தலைமுறைகளுக்கு முற்பட்ட ஒரு பொது முன்னோனைக் கொண்டிருப்பார்கள் 

(உ.ம்: ஒரு பூட்டனையோ, கொள்ளுப் பாட்டனையோ அல்லது இன்னும் முற்பட்ட ஒரு முன்னோனையோ பொதுவாகக் கொண்டிருக்கலாம்).

பாட்டன் பாட்டியை மட்டும் பொதுவாகக் கொண்ட உறவுமுறைக் குழுக்கள் கூட்டுக் குடும்பம் என்று அழைக்கப்படுமேயன்றி குலம் என்று அழைக்கப்படுவதில்லை. சில குலங்கள் மிகவும் பெரிதாகவும், பழமையானவையாகவும் இருப்பதால் அவைகள் "விதிக்கப்பட்ட" பொது முன்னோரைக் கொண்டிருப்பர்; அதாவது பொது முன்னோர் பற்றிய சான்றுகள் எதையும் கொண்டிராமல், கற்பனையான, குலத்தின் ஒருமைப்பாட்டுக்கான ஒரு குறியீடாகவே இருக்கும். சில சமூகங்களில் இந்த முன்னோர் மனிதராகக் கூட இருப்பதில்லை; ஒரு குலக்குறியாக மட்டும் இருக்கும்.

சில குலங்கள் தந்தைக்கால்வழிப்பட்டவை, அதாவது இதன் உறுப்பினர் ஆண் வழியால் உறவு கொண்டவர்கள்.

வேறு சில தாய்க்கால்வழிப்பட்டவை; இதன் உறுப்பினர் பெண் வழி உறவுமுறை உள்ளவர்கள்.

இன்னும் சில ஒரு பொது முன்னோரின், ஆண், பெண் இருவழியையும் சேர்ந்த சகலரையும் கொண்ட "இருவழி"யானவை.

ஒரு குலம், தந்தைக்கால்வழியோ, தாய்க்கால்வழியோ அல்லது இருவழிப்பட்டதோ என்பது குறிப்பிட்ட குலம் வாழும் பண்பாட்டின் உறவுமுறை விதிகளில் தங்கியுள்ளது.


ஜாதிகள் காரணப் பெயர்கள்

ஏனாதி என்பது சேனாபதியைக் குறிக்கும் சங்ககாலத் தமிழ்ச்சொல். போரில் மதிலின்மீது ஏறுதல்ஏணிஎனப்படும். இதனைத் தொல்காப்பியம்மடையமை ஏணிமிசை மயக்கம்எனக் குறிப்பிடுகிறது. இது உழிஞைத்திணையின் துறைகளில் ஒன்று.
என்னும் சொல் அம்பைக் குறிக்கும்.
+ஆதி=ஏனாதி. இதில்ன்என்பது சாரியை.
+நிரை=ஆனிரை என வருவதை இதனோடு ஒப்பிட்டு உணர்ந்துகொள்ளலாம்.
இவற்றைப்போலக் கா என்பது கான் என்றும், எனபது ஊன் என்றும், மா என்பது மான் என்றும், தே எனபது தேன் என்றும் வருவனவற்றையெல்லாம் இங்குப் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம்.
வில்லாண்மையில் சிறந்தவன் என்னும் பொருளில் இந்த ஏனாதி என்னும் பட்டம் சங்ககால மன்னர்களால் வழங்கப்பட்டது. ஏனாதி திருக்கிள்ளி, சோழிய ஏனாதி திருக்கண்ணன் ஆகியோர் ஏனாதி பட்டம் பெற்ற படைத்தலைவர்கள்
காவிதி என்பது சிறந்த உழவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டம்.
நாயகன் என்பது சிறந்த கடல்வணிகனுக்கு வழங்கப்பட்ட பட்டம்.
எட்டி என்பது சிறந்த உள்நாட்டு வணிகர்களுக்கு வழங்கப்பட்ட பட்டம். இது இக்காலத்தில் செட்டி என மருவியுள்ளது.
எட்டி < செட்டி என்பது போல ஏனாதி < சேனாதி, சேனாபதி என்னும் மரூஉ தோன்றியுள்ளது.
செட்டி
பெயர் விளக்கம் - பெரும் பொருளீட்டி நாட்டிற்கு நன்மை செய்த வணிகர் தலைவர்க்குப் பண்டையரசர் அளித்த பட்டம் எட்டி என்பது.எட்டுதல் - உயர்தல். எட்டம் - உயரம். எட்டு -எட்டி = உயர்ந்தோன். பரம + எட்டி = பரமேட்டி (எல்லார்க்கும் மேலாக வுயர்ந்த இறைவன்) - மரூஉப்புணர்ச்சி. எட்டி - செட்டி. வடநாட்டு மொழிகளில் எகரக் குறிலின்மையால், செட்டி என்பது சேட்டி -சேட் எனத் திரிந்தது.

பல்வேறு வாணிக வகுப்பார், செட்டி என்பதைப் பட்டமாக மட்டுமன்றிக்குலப் பெயராகவும் கொண்டுள்ளனர்.
(1)
வெள்ளாளஞ் செட்டி (வேளாண்குல வாணிகன்).
 (2) வாணியச் செட்டி.
தொழில் - செக்காட்டி எண்ணெய் விற்றல்.

(3)
நாட்டுக் கோட்டைச் செட்டி
     
தொழில் - வட்டிக்குப் பணம் கொடுத்தல்.

(4)
நகரத்துச் செட்டி (ஆயிர வணிகர்

(5)
காசுக்காரச் செட்டி.
     தொழில் - பொன்மணி வாணிகம், காசுமாற்று.

(6)
பேரிச் செட்டி.
தொழில் - ஊரூராகச் சென்று பேரிகை கொட்டிப் பண்ணியம் விற்றல்.




(7) 
கரையான் செட்டி-(பட்டணவன், பரவன்
தொழில் - கடல் வாணிகமும் மீன் வாணிகமும்.

(8)
மளிகைச் செட்டி
தொழில் - பலசரக்கு விற்பனை.

செம்படவன்
தொழில் - ஆறு குளம் ஏரிகளில் மீன்பிடித்தல், கடல்மீனும் கருவாடும் விற்றல்,  ஓடமும் பரிசலும் விடுதல்.
தலைவன் பட்டம் - நாட்டான்,நாட்டாண்மைக்காரன்.
குலப்பட்டம் - நாட்டான், கவுண்டன்,மணியக்காரன், பகுத்தார், பிள்ளை.
பயிரிடும் சிலர் குக வெள்ளாளர் எனப்பட்டனர்.

தேவடியாள்
தொழில் - கோவில் தொண்டும்பரத்தைமையும்.
வகைகள் - தேவகணிகையர், நேர்ந்து கொண்டோர், வறுமை யால் அடிமைப்பட்டோர், குலவழக்கத்தால் ஆனோர், ஆரியப் பூசாரியரால் வேண்டப்பட்டோர், இவ்வகையாரின் வழியில் வந்தோர்.
தேவனுக்கு அடியாள் என்னும் சிறந்தபெயர் ஒழுக்கக் கேட்டால் இன்று இழிவடைந்துள்ளது.

பண்டாரம்
பெயர் விளக்கம் - பண்டாரம் = கருவூலம் போன்ற உயர் பொருள் பேரறிஞன்.
பிரிவு - வெள்ளாளப் பண்டாரம் (கோவிற் பண்டாரம், மடத்துப் பண்டாரம், ஆண்டிப்பண்டாரம்), பள்ளிப் பண்டாரம், பள்ளர் பண்டாரம், வள்ளுவப் பண்டாரம் (பறையர் குரு).

பணிக்கன்
பெயர் - இல்லத்துப் பிள்ளை.
தொழில் - நெசவும் வாணிகமும்.
பிரிவு - பல புறமண இல்லங்கள்.
பட்டம் - பணிக்கர்.

பணிசெய்வோன் (பணிசவன்)
தொழில் - சாவறிவித்தலும் தாரை ஊதுதலும் இரத்தலும் (சேலம்).
கோவிலில் இசைக்குழல் ஊதுதலும் நட்டுவமும் (திருநெல்வேலி).
பிரிவு - வலங்கை, இடங்கை.
பட்டம் - புலவன், பண்டாரம், பிள்ளை,முதலி.

பரத்தை
பெயர் - விலைமகள், பொதுமகள், வரைவின் மகள், இராக் கடைப் பெண்டு.
வகை - இற்பரத்தை, சேரிப்பரத்தை.

பரிவாரம்
வந்தவழி - முக்குலத்தோர் கலப்பு.
தொழில் - வீட்டுவேலை செய்தல், மீன்பிடித்தல்.
பிரிவு - சின்ன வூழியம் ,பெரிய வூழியம் என்னும் ஈரகமணப் பிரிவுகள்.
பட்டம் - மணியக்காரன், சேர்வைக்காரன், ஊழியக்காரன்.

ஊராளி
தொழில் - பெரும்பாலும்பயிர்த்தொழில்.
பிரிவு - ஏழ் அகமண நாடுகள். கரை அல்லதுகாணியாட்சி என்னும் புறமண   உட்பிரிவுகள் உண்டு.
பட்டம் - கவுண்டன்.

ஓதுவார்
தொழில் - சிவன் கோவிலில் பூசைசெய்தல்.
இனப் பிரிவு - ஓதுவார், பண்டாரம்,குருக்கள், புலவர்.

கடசன்
தொழில் - கூடை முடிதல்,சுண்ணாம்புக்கல் சுடுதல்.
பிரிவு - பட்டங்கட்டி, நீற்றரசன்என்னும் அகமணப் பிரிவுகள்.
பட்டம் - பட்டங்கட்டி, கொத்தன்.

கணக்கன்
தொழில் - ஊர்க்கணக்கு எழுதுதல்.
பட்டம் - பிள்ளை.

கணிகை (பெண்)
தொழில் - நாடக வரங்கிலும் கோவிலிலும் நடஞ்செய்தல்.
பிரிவு - நாடகக் கணிகை, தேவகணிகை.

கள்ளன்
பெயர் விளக்கம் - வேற்று நாட்டுஆநிரைகளைக் (பசுக்கூட்டங்களைக்களவில் கவருமாறு, சோழ வேந்தரால்ஆளப்பட்ட பாலைநிலத்து வெட்சி மறவர் கள்ளர்அல்லது கள்வர் எனப்பட்டனர்.
தொழில்-பண்டைநாளில் போர்த்தொழில். இன்று பயிர்த் தொழிலும் கல்வித் தொழிலும்.
பண்டை இடம் - சோழநாடு.
பிரிவு-மேல்நாடு சிறு குடிநாடு முதலிய பத்து அகமண நாடுகள் (மதுரை), பதினால் நாடுகள் (சிவகங்கை). வகுப்பு, தெரு, கரை, கிளை என்பன நாட்டின் புறமண உட்பிரிவுகள்.
தலைவன் பட்டம்-அம்பல(க்)காரன், நாட்டான், இராசாளி
குலப் பட்டம்- நாட்டார், வன்னியன், பிள்ளை, அம்பலகாரன், சம்புவராயன், வாண்டையார், சேர்வைகாரன், சோழகன் முதலியன.

குசவன்
தொழில் - மட்கலம் வனைதல்.
பட்டம் - வேளான், செட்டி, உடையார்,பிள்ளை.

குடிமகன்
தொழில்- பெரும்பான்மை மயிர்சிரைத்தலும் வெட்டுதலும், சிறுபான்மை மருத்துவமும்அறுவையும் (Surgery).
பிரிவு - தீண்டுவான், தீண்டான்.
பட்டம் - பண்டிதன்.

குறவன்
தொழில் - வேட்டையாடல், கூடைமுறம்முடைதல், உப்பு விற்றல், மருத்துவஞ் செய்தல்,திருடல்.
பெண்களின் தொழில் - குறிசொல்லுதல், பச்சை குத்துதல்.
பிரிவு - ஊர்க்குறவன், மலங்குறவன், நாடோடி.
நாடோடிகள்-காளிக்கோட்டம் வரை பல்வேறு நாடு சென்று,அந்த அந்த  நாட்டு மொழி பேசி, வெவ்வேறு பெயர் கொண்டுவேட்டை மருத்துவம் களவு ஆகிய தொழில்செய்பவர்.
குருவிக்காரன் அல்லது நரிக்குறவன் தமிழ் மராட்டி இந்துத்தானி ஆகிய மும்மொழி பேசுபவன்.
குலப்பட்டம் - சேர்வைகாரன், பிள்ளை, கவுண்டன் முதலியன.

கைக்கோளன்
பெயர் - கைக்கோளன் (தமிழ்நாட்டின் நடுபகுதி தென் பகுதியும்).
செங்குந்தன் (தமிழ்நாட்டின் வடபாகம்).
கையிற் கோல் (நெசவுக் குழல்) கொண்டவன் கைக்கோளன்.
கோலன் - கோளன். குழல்-கோல். கையில் செங்குந்தம் பிடித்திருந்த போர்ப்படையினர் வழிவந்தவர் செங்குந்தர்.
தொழில் - நெசவு.
பிரிவு (சில இடங்களில்) - சோழியன், இறாட்டு, சிறுதாலி, பெருந்தாலி, சீர்பாதம், சேவகவிருத்தி.

நாட்டுப்பிரிவு-72 நாடு.
வழக்கம் - ஒவ்வொரு குடும்பமும் ஒருபெண்ணைக் கோவிலுக்குத் தேவ கணிக்கையாக விடுதலும், அவளொடு செல்வ அல்லது ஏழைப் பிராமணன் கூடுதலும். இவ் வழக்கம் இப்போது நின்றுவிட்டது.


கொல்லன்
வகையும் தொழிலும் - ஐங்கொல்லர்(ஐங்கம்மாளர்).
மரக்கொல்லன் - தச்சன்.
கற்கொல்லன் - கற்றச்சன், கம்மியன்.
பொற்கொல்லன் - தட்டான்,கம்மாளன்.
செப்புக் கொல்லன் - கன்னான்.
இருப்புக் கொல்லன் - கருமான்(கருமகன்), கொல்லன்.

முதன் முதல் தோன்றியவன் மரக்கொல்லனே. ஓரறிவுயிருள்ள மரத்தை வெட்டிக்கொல்வதால், அவன் கொல்லன் எனப்பட்டான்; அவன் தொழில் கொல் எனப்பட்டது. முதல் காலமாகிய கற்காலத்தில், மரத்தினாலும் கல்லாலுமே வீடு கட்டப்பட்டது. அதன் பின்னரே பொன்னும் செம்பும் உறையும் இரும்பும் கண்டுபிடிக்கப்பட்டன.
தலைவன் பட்டம் - நாட்டாண்மைக்காரன், கருமத் தான் (காரியத்தன்).
குலப்பட்டம் - நயினார், பத்தன், ஆச்சாரி(ஆசாரி) என்பது பிராமணரொடு போட்டியிட்ட பிற்காலத்து ஆரியச் சொல்.

கோலியன்
தொழில் - நெசவு
பிரிவு - நாடுகள் என்னும் பெரும்பிரிவும் குப்பங்கள் என்னும் சிறு பிரிவும்.
பட்டம் - 'ஈசன்' என்னும் வடசொல் அடைமொழி.

சவளக்காரன்
தொழில் - ஓடம் விடுதல், பயிர் விளைத்தல், இசைக்குழல் ஊதல், ஈட்டிப் போர்புரிதல், தாதுக்கனி தோண்டுதல்.
பட்டம் - படையாட்சி (பயிர்த்தொழிலாளர்) , அண்ணாவி (இசைத்தொழிலாளர்).

சாயக்காரன்
தொழில் - சாயங் காய்ச்சுதல்.

சாலியன்
தொழில் - நெசவு.

பிரிவு - 24 புறமணவீடுகள்.

பட்டம் - அடவியார்.

சான்றான் (சாணான்)
பெயர்: சான்றோர் = போர்மறவர்.
சான்றோர்-சான்றார்
தொழில் - கள்ளிறக்குதல், கருப்பட்டி காய்ச்சுதல், வாணிகம் செய்தல், குடிக்காவல், படைக்கலம் பயிற்றல்.
ஊர்த்தலைவன் பட்டம் - நாட்டாண்மை.
குலப்பட்டம்-நாடார்,  சேர்வைகாரன். முக்குந்தன்.

சிங்கன்
தொழில் - வேட்டையாடல்.




ஆரிய வைசியர்களின் குலதெய்வம்

கன்னிகா பரமேஸ்வரி

கன்னிகா பரமேஸ்வரி  ஆரிய வைசியர்களின் குலதெய்வமாக விளங்குகிறாள்.
இந்த அம்மனின் அவதார நன்னாள் வைகாசி தசமி.
கயிலையில் பார்வதியும் பரமேஸ்வரனும் தங்கமயமான மாளிகையில் ஆனந்தமாக இருந்து ஆன்மாக்களை ரட்சித்து வரும் வேளையில், மகேஸ்வரனின் தலைவனான நந்திகேஸ்வரன் கங்கையில் நீராடப் புறப்பட்டார். அருகிலிருந்த சமாதி முனிவரிடம், தான் வரும்வரை கயிலை வாயிலைக் காவல் புரியுமாறும்; யார் வந்தாலும் அனுமதிக்க வேண்டாம் என்றும் கூறிச் சென்றார்.
அப்போது பார்வதிபரமேஸ்வரனை தரிசிக்க துர்வாச முனி அங்கு வந்தார். காவல் நின்ற சமாதி முனிவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் கோபமடைந்த துர்வாசர் சமாதி மகரிஷியை மானுடனாகப் பிறக்கும்படி சாபமிட்டார். (அதன்படி ரிஷி பெனுகொண்டா நகர மன்னன் குஸ¤மரேஷ்டியாகப் பிறந்து ஆண்டு வந்தார்.)
கங்கையில் நீராடித் திரும்பிய நந்தி பரமேஸ்வரன் காலில் விழுந்து வணங்கினார். இதைப்பார்த்த பார்வதி, நந்தி தன்னை அலட்சியம் செய்துவிட்டதாக நினைத்து கோபம் கொண்டாள். உடனே நந்தியைப் பார்த்து, ‘நீ பூவுலகில் மானுடனாகப் பிறப்பாய்என சாபமிட்டாள்.
எந்தத் தவறும் செய்யாத தனக்கு இப்படி ஒரு சாபமா என எண்ணி வருந்திய நந்தி, சிவபெருமானிடம் தானும் சாபம் தர வரம் கேட்டுப் பெற்றார். பின்னர் பார்வதியைப் பார்த்து, ‘தேவி தாங்கள் பூவுலகில் பெண்ணாக அவதரித்து, கடைசிவரை கன்னியாகவே இருந்து அக்னிப் பிரவேசம் செய்து கயிலை அடைவீர்கள்என சாபமிட்டார் நந்தி.
பெனுகொண்டா மன்னர் குஸ¤மரேஷ்டி (சமாதி முனிவர்) புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். அதனால் அவர் மனைவி குஸ¤மாம்பிகைக்கு பார்வதியும் நந்தியும் இரட்டைப் பிள்ளைகளாக அவதரித்தனர். ஆண் குழந்தைக்கு (நந்தி) விருபாக்ஷன் என்று பெயர் பெண் குழந்தைக்கு (பார்வதி) வாசவாம்பாள் என்று பெயர். இவர்கள் இருவரும் சீரும் சிறப்புமாக வளர்ந்தனர். குரு பாஸ்கராச்சாரியரே வியப்படையும்படி சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்றனர். வளர்ந்து பருவம் அடைந்தனர்.
முன்னமேயே சமாதி முனிவரிடம் சாபம் பெற்ற கந்தர்வன் விஷ்ணுவர்த்தன் என்ற பெயரில் பக்கத்து நாட்டை ஆண்டு வந்தான். ஒருமுறை அவன் பெனுகொண்டா வந்து குஸ¤மரேஷ்டி மன்னன் அரண்மனையில் தங்கியபோது அழகிய கன்னியான வாசவியைக் கண்டான். அவளிடம் மனதைப் பறிகொடுத்த அவன் திருமணம் செய்துகொள்ள பெண் கேட்டான்.
குஸ¤மரேஷ்டி வைசிய தர்மப்படி மன்னனுக்கு பெண் தர இயலாமையை எடுத்துக் கூறினார். கோபமடைந்த விஷ்ணுவர்தன் வன்முறையைக் கையாள முயல, பயந்த மன்னன் தன் குலத்தாருடன் ஆலோசித்து பதில் சொல்வதாகக் கூறி சமாதானப்படுத்தி அனுப்பினார்.
18 நகரங்களிலிருந்து 714 கோத்திரத்தார் மன்னர் அழைப்பினால் வந்து சேர்ந்தனர். நகரேஸ்வரர் ஆலயத்தில் உள்ள வைசிய மகா சபையில் கூடினர். பிரச்சினையைப் பற்றி ஆலோசித்தனர். பலர் உடன்பட்டனர். சிலர் உடன்படவில்லை. 612 கோத்திரக்காரர்கள் பெண் கொடுக்கலாம் என்றனர். 102 கோத்திரக்காரர்கள் கொடுக்க வேண்டாம் என்றனர். அதனால் கோபமடைந்த 612 கோத்திரக்காரர்கள் (இவர்களை பெனு கொண்டாவில் நெய் செட்டு (நெய் செட்டி) என்று அழைப்பர்) நாட்டை விட்டு வெளியேறினர்.
இவ்வளவு குழப்பமும் தன்னால் வந்ததுதானே என எண்ணிய வாசவி இதற்குத் தானே பரிகாரம் செய்ய எண்ணி தீக்குளிக்க முடிவெடுத்தாள். அவள் கட்டளைப்படி நகரேஸ்வரர் ஆலயத்தின் முன் அக்னி குண்டம் அமைக்கப்பட்டது. அதில் வாசவி அக்னிப் பிரவேசம் செய்தாள்.
அவளுடன் 102 கோத்திரக்காரர்கள் தங்கள் குழந்தைகளை மட்டும் விட்டுவிட்டு அக்னிப் பிரவேசம் செய்து கயிலை அடைந்தனர். (இவர்களை எண்ணெய் செட்டு (எண்ணெய் செட்டி (என பெனுகொண்டாவில் அழைப்பார்கள்.) மேற்படி செய்திகளைக் கேள்விப்பட்ட உடனேயே விஷ்ணுவர்த்தனின் தலை சுக்குநூறாக வெடித்தது. அவன் அழிந்தான்.
அவன் மகன் ராஜராஜேந்திரன் தன் தந்தை தவறு செய்ததால் இப்படி இறந்துவிட்டாரே என வருந்தினான். பிராயச்சித்தமாக தன் அரசு முழுவதையும் வைசியர்களுக்கு காணிக்கையாக்கிவிட்டு மன்னிப்பும் கேட்டான். அவர்கள் அவன் ராஜ்ஜியத்தை ஏற்கவில்லை. அப்போது வாசவி அக்னிக் குண்டத்தினின்று அம்பிகையாகத் தோன்றி மன்னன் மகனை ரட்சித்தாள். பின் தன்னுடன் அக்னிப் பிரவேசம் செய்த நல்லவர்களை வாழ்த்தினாள்.
இன்று முதல் நீங்கள் (102 கோத்திரக்காரர்கள்) பொன், புகழ், கல்வி உள்ளிட்ட சம்பத்துக்கள் அனைத்தையும் பெற்று குறைவின்றி வாழுங்கள்என வரமளித்தாள். அதன்படி வாழ்ந்து
, ஆண்டு தோறும் தங்கள் குலதெய்வமான வாசவியின் அவதார நன்னாளையும், அக்னிப் பிரவேசத்தையும் அதிவிமர்சையாக தங்கள் ஆலயங்களில் கொண்டாடி வருகின்றனர்.
பெனுகொண்டாவில் ஆயிரம் கால் மண்டபம்போல் அமைந்த தூண்களில், அம்மனுடன் ஐக்கியமான 102 கோத்திரத்தார்களின் வரலாறு அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளது.
இதுபோல் புதுச்சேரி காந்தி வீதி சந்திப்பில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன்ஆலய முன்மண்டபச் சுவர்களின் வாசவியின் வரலாற்றை வண்ணச் சித்திரமாகத் தீட்டியுள்ளனர்.

வன்னிய புராணம்

வன்னிய புராணம் என்பது ஸ்ரீ வீர உருத்ர வன்னிய மகாராசாவின் தோற்றத்தைப் பற்றி கூறும் நூல். இந்நூல் சுந்தர பாண்டிய மன்னரின் முன்னிலையில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1216-1238 இது எழுதப்பட்டது வடமொழியில் எழுதப்பட்ட நூலானஅக்னிஅல்லதுஅக்னேய புராணத்தில்இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.
அக்னி புராணம் இந்து மதத்தின் 18 புராணங்களில் ஒன்றாகும். இந்த புராணத்தில் வரும் ெய்திகள் சீர்காழியின் அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவிலின் கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளன. வீர உருத்ர வன்னிய மகாராஜா, சம்பு முனிவர் நடத்திய வேள்வியில் பிறந்ததைப் பற்றி கூறுவதால் இந்நூல் சம்பு மைந்தர் காப்பியம் என்றும் வன்னியர் புராணம் என்றும் அழைக்க பெற்றது.
வன்னி என்றால் அக்னி எனப் பொருள்படும். இந்த உருத்ர வன்னியரின் வழி வந்தவர்கள் வன்னியர் என்றழைக்கப்படுகின்றனர்.


தூர்வாச முனிவருக்கும் கஜமுகிக்கும் இரண்டு அசுர குழந்தைகள் பிறந்தனர். அவர்களின் பெயர் "வில்வலன்" மற்றும் "வாதாபி". இவர்களின் தாயாரான கஜமுகி என்பவள் முருகப்பெருமானால் வதம் செய்யப்பட்ட சூரபத்மனின் இளைய தங்கை ஆவாள்.
வில்வலனும் வாதாபியும் அகத்திய முனிவரை துன்புறுத்த ஆரம்பித்தனர். இதனால் கோபம் அடைந்த அகத்தியர் வில்வலனை விழுங்கி விட்டார். உடனே வாதாபி சிவனை நோக்கி தவம் இருந்து பல சக்திகளையும் பெற்றான். அந்த வலிமையின் மூலம், தெற்கு கடற்கரையின் மையப் பகுதியில் அமைந்திருந்த ரத்னபுரியை அரசாள ஆரம்பித்தான். பின்னர் மாயனின் மகளான சொக்க கன்னியை மனந்தான். வாதபி செய்யும் அனைத்து காரியங்களுக்கும் அசுர குருவான சுக்ராசாரியர் துணை இருந்தார். பின்னர் வாதாபி தேவர்களை மிகவும் துன்புறுத்தத் தொடங்கினார். இதை கண்ட நாரதர், சிவபெருமானிடம் தேவர்களின் இன்னல்களைக் கூறினார். அதே சமயம் தேவர்களை காக்க சம்பு முனிவர், சிவபெருமானை நோக்கி வேள்வி ஒன்றை நடத்தினார். அப்பொழுது சம்பு முனிக்கு சிவபெருமான் அருள் பாவித்து, தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஒரு நெருப்புத்(வன்னி) துளியை அந்த வேள்வியில் விழச் செய்தார். விழுந்த அந்த நெருப்பிலிருந்து வெள்ளைக் குதிரையில் கையில் வாளுடனும், தலையில் கிரீடத்துடனும் ஒரு வீரன் வந்தான். அவன்ஸ்ரீ வீர உருத்ர வன்னிய மஹாராஜா என்றழைக்கப்பட்டான்.
சிவபெருமானும், தாய் பார்வதியும் தேவேந்திரனின் இரண்டாம் மகளான மந்திர மாலையை திருமணம் செய்து வைத்தார்கள். மந்திர மாலை என்பவள் முருகப்பெருமானின் மனைவியான தெய்வயானியின் தங்கையாவாள். இவர்களுக்கு நான்கு வீர ஆண் மகன்கள் பிறந்தார்கள். அவர்களின் பெயர்கிருஷ்ண வன்னியர், பிரம்ம வன்னியர், அக்னி வன்னியர், சம்பு வன்னியர்என்பனவாகும். இவர்களுக்கு காந்தா(சுஷீலா) என்னும் துறவியின் நான்கு மகள்களையும் திருமணம் செய்தார்கள். அவர்களின் பெயர்இந்திராணி , நாரணி ,சுந்தரி ,சுமங்கலி என்பனவாகும்.

அசுரனுடன் போர்

சிவபெருமானின் அறிவுரைப்படி அசுரன் வாதாபியை வதம் செய்ய உருத்ர வன்னியர், சிவபெருமான் அளித்த தம் படையுடன் தெற்கு நோக்கி சென்றார். அங்கே உள்ள துர்க்கையின் கோவிலுக்கு சென்று, போரில் தமக்கு துணையாக இருக்குமாறு வணங்கினார். அதற்கு ஆசி தரும் விதமாக, துர்க்கையின் பூதப் படையும் வன்னியருடன் வந்தது. அந்தப் படையையும் அழைத்துகொண்டு ருத்ர வன்னியர் கடற்கரையை நெருங்கும் போது, கடல் தானாக வழி விட்டது. அப்பொழுது அவர்களுடன் சென்ற ஒரு நாயால், அந்த கடற்கரையை தாண்ட இயலவில்லை. அதனால் அந்த நாய் மீண்டும் வன்னியரின் அரண்மனைக்கே திரும்பியது .
உருத்ர வன்னியரும் அவரது படையும் ரத்னா புரியை அடைந்த உடன், அசுரன் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு தர எண்ணினார் வன்னியர். நாரதரை அசுரன் வாதாபியுடன் சமாதானம் பேச அனுப்பினார். ஆனால் அது தோல்வியிலே முடிந்தது. அதன் விளைவு, வன்னியர் படைக்கும் அசர படைக்கும் மிகப்பெரிய போர் உருவாயிற்று. அசுரர்களின் குலதெய்வமான காளி அம்மன், அசுரர்களுக்கு துணையாக இருந்ததால் மிக உக்கிரமாக நடந்த அந்தப் போரின் முடிவில், ருத்ர வன்னியரின் கையால் அசுரன் வாதாபி கொல்லப்பட்டான். பெண்கள் உட்பட அனைத்து அசுரர்களும், வன்னியர் படையால் வதம் செய்யப்பட்டனர் . இருப்பினும் சுக்ராசாரியாரின் யோசனைப்படி, நான்கு அசுரப் பெண்கள் மட்டும் மனித வடிவில் இருந்தனர். இவர்களை கண்ட வன்னியர்கள், இந்த பெண்கள் மனித குலத்தவர்கள் என்று நினைத்து வன்னியர்கள், அவர்களை வதம் செய்யாமல் தங்களோடு தம் அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர்.
போர் முழுமையாக முடிந்தவுடன், துர்க்கையை தரிசித்து விட்டு ருத்ர வன்னியரும் அவரது படையும் தமது இருப்பிடத்திற்கு வந்தனர். தம் இருப்பிடத்திற்கு வந்த உருத்ர வன்னியர் அதிர்ச்சிக்கு உள்ளானார். கடலைத் தாண்ட முடியாமல் வீட்டிற்கு வந்த நாயைக் கண்ட உருத்ர வன்னியரின் மருமகள்கள், போரில் வன்னியர் படை வீழ்ந்தது என நினைத்து தங்கள் கணவர்மார்களும் மடிந்திருப்பர் என்று நினைத்தும் தீயை மூட்டி அதில் உடன்கட்டை ஏறித் தங்கள் உயிரை மாய்த்து கொண்டனர். பிறகு உருத்ர வன்னியரின் நான்கு மகன்களும், தாங்கள் அழைத்து வந்த மனித உருவில் இருந்த அந்த நான்கு அசுர பெண்களையும் காந்தர்வ திருமணம் செய்து கொண்டு, அவர்களோடு வாழ ஆரம்பித்தனர்.

வன்னியர்கள் ஆளும் நிலப்பகுதி

சிவபெருமானும், நாராயணனும் உருத்ர வன்னியரிடம்சம்பு பகுதியை ஆட்சி செய்யுமாறு கூறினர். அதுபோல வடக்கேபாலாறு வரை பிரம்ம வன்னியரிடமும், பெண்ணையாறு வரை கிருஷ்ண வன்னியரிடமும், அங்கிருந்து வடக்கேகாவேரி வரை சம்பு வன்னியரிடமும், தென்மேற்கு பகுதியை அக்னி வன்னியரிடமும் ஆட்சி செய்யுமாறு கூறினர். அதன் பிறகு, உருத்ர வன்னியர் மற்றொரு மகனை பெற்றார். அவர் பெயர்சந்திர சேகர மகாராஜன். உருத்ர வன்னியர் தம் ஆட்சி பொறுப்பைத் தமது மகன் சந்திர சேகர மகாராஜனிடம் கொடுத்து விட்டு, தேவேந்திரனின் அழைப்பை ஏற்று இந்திரலோகத்திற்குச் சென்றார்.

மக்கள் பண்பாட்டில் வன்னிய புராணம்

வாதாபி சூரனை அழிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட வன்னிய புராணம் மறுபுறம் வன்னியர்களிடையே கதையாக பரவியிருந்தது. வன்னியர்களின் தலைவன் வீர வன்னிய ராசன் வாதாபியை அழிப்பதற்காக சிவனால் தோற்றுவிக்கப்பட்டவர். வாதாபி அரக்கனை அழிக்கப் புறப்படும்போது அவருடைய மனைவி மந்திரமாலா போரின் விளைவு என்னவாகுமோ என கவலைப்படுகிறாள். அதற்கு வன்னியராசன் "என்னுடன் நாய் வருகிறது. நான் போரில் இறந்தால் நாய் திரும்பிவரும், வீட்டில் ஏற்றப்பட்ட காமாட்சி விளக்கு அணையும், மல்லிகைப் பூ வாடும்" என்று சொல்லிவிட்டு செல்கிறார். வன்னியராசன் செல்லும் வழியில் ஆறு குறுக்கிடுகிறது. அவர் ஆற்றைக் கடந்து சென்றுவிடுகிறார். ஆனால் நாய் கடக்க முடியாமல் திரும்பி விடுகிறது. நாயைப் பார்த்த மந்திரமாலா கணவர் இறந்துவிட்டதாகக் கருதி தாலியை அறுத்துவிடுகிறாள். வீட்டில் விளக்கு அணையாததையும், மலர் வாடாததையும் அவள் கவனிக்கவில்லை.
போரில் வெற்றிபெற்று திரும்பும் வீரவன்னிய ராசன் தன் மனைவி விதவைக் கோலத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். நடந்ததை அறிந்து மீண்டும் தாலி கட்டுகிறான். இப்படி தாலியை அறுத்துக்கட்டக்கூடிய பழக்கம் வன்னியர்களிடையே இருக்கிறது. இன்றைக்கும் ஆடிப்பெருக்கு அன்று தாலியை அறுத்துக்கட்டும் சடங்கை பல வன்னியர்கள் செய்கின்றனர். இக்கதை ஒரு சில மாற்றங்களுடன் வன்னியக் கூத்து என்ற பெயரில் கிராமப்புறப்பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

பல்லவரும் வன்னியரும்

தமிழ்நாட்டின் மக்கள் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடிக்கும் ஒரு நிகழ்வு சாளுக்கிய மன்னன் புலிகேசிக்கும் பல்லவர்களுக்கும் நடந்த போராகும். பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டு காஞ்சியிலிருந்து துரத்தப்பட்டான். இதற்குப் பழிவாங்க சபதமேற்ற அவனது மகன் நரசிம்மவர்மன், மக்களுக்கு போர்க்குணம் ஏற்படச் செய்யவேண்டும் என்பதற்காக பாரதம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினான் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இதன் பலனாக கி.பி.642 ஆம் ஆண்டில் புலிகேசியின் பாதாமி நகர் தாக்கப்பட்டு அவன் தோற்கடிக்கப்பட்டான் (கருநாடக மாநிலத்தில் உள்ள நகரம் - தமிழில் வாதாபி). நரசிம்மவர்மனது படைவீரர்களாக இருந்தவர்கள் வன்னியர்கள். பாதாமியை வென்ற படைக்கு தலைமையேற்ற பரஞ்சோதி என்கிற சிறுதொண்டர் வன்னியர் குலத்தைச் சேர்ந்தவர். இவரைப்பற்றி பெரிய புராணம் குறிப்பிடுகிறது. இக்கதையே வாய்மொழியாக வழங்கப்பட்டு பின்பு வன்னிய புராணம் என்ற பெயரில் வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.


குலம் தழைக்கச் செய்யும் பித்ருக்கள் ஆராதனை!
குலம் தழைக்கச் செய்யும் பித்ருக்கள் ஆராதனை! சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கோள்கள் என மிக பிரமாண்டமாகப் பரந்து விரிந்திருக்கிற இந்தப் பிரபஞ்சத்தில், நாம் வசிக்கும் இந்த உலகம் ஒரு துளி! 

நாம் எப்படி இந்த உலகுக்கு வந்தோம்? கடவுளால் படைக்கப்பட்டு! நம்மையும் இந்த உலகையும், உலகத்து மக்களையும், அண்ட சராசரங்களையும் படைத்தது இறைவன்தானே! அனைத்து இடங்களிலும், எல்லோர் வீடுகளிலும் இருந்துகொண்டு, நம்மை போஷிப்பதற்காகவே தாய்- தந்தையரைப் படைத்து, அவர்களின் மூலமாக இந்த உலகுக்கு நம்மை அருளினார் கடவுள். அதனால்தான், நம்மை இந்த உலகுக்கு வழங்கி, சீராட்டிப் பாலூட்டி வளர்த்த பெற்றோரை, 'தந்தை- தாய் பேண்என்றும், 'நன்றி மறவேல்என்றும் சொல்லி, பெற்றோரைப் பராமரிப்பதை ஓர் அத்தியாவசியக் கடமையாகப் பணித்து வைத்தது இந்து தர்மம்.