என்னைப் பற்றி

எனது படம்
121, அண்ணாநகர், தெரு.4, பொன்னம்மாபேட்டை, சேலம்.636001. அலைபேசி எண் - 98426 82566 & 90924 53376

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

ஆன்மீகம் , அபிஷேகம்

ஆன்மீகம் என்றால் என்ன?
ஏதோ ஒரு சக்தி நம்மைச் சூழ்ந்து இருக்கிறது ஆன்மீகம் என்பது அந்த சக்தியின் பால் நம் மனதைச் செலுத்தி, அச் சக்தியின் இருப்பை உணர்வது. இறைச் சக்தியை உணர்வது என்பது ஆன்மீகம் எனப்படும்.

ஆன்மீகவாதிகள் என்று குறிப்பிடுவர்கள் யார்?
யார் பிறருக்கு தீங்கு செய்யாமல், பிறத்தியாரின் வாழ்வு உயர உழைக்கின்றார்களோ அவர்களே ஆன்மீகவாதிகள் எனப்படுவர்

குரு என்பவர் யார்?
குரு தன்னை சிஷ்யனிடம் ஆதாரமாய் வைத்து, அவனைக் குருவாய் மலரச் செய்பவர்.

ஞானிகள் என்று சொல்லப்படுவர்கள் யார்?
எவருக்கும் குருவாய் இருக்க மாட்டார்கள். அவர்கள் வாழ்க்கையே பிறருக்கானதாய் வாழ்பவர்கள் ஞானிகள் எனப்படுவர்.

யோகிகள் என்பவர்கள் யார்?
யோகக்கலையின் மூலமாய் கடவுளை அடைய முயற்சிப்பவர்கள் யோகிகள் எனப்படுவர்.

சித்தர்கள் என்று அழைக்கப்படுவர்கள் யார்?
தன்னையே கடவுளாய் மாற்றிக் கொண்டவர்கள் சித்தர்கள். 

மகான் என்பவர் யார்?
கடவுளை அடைய பிறருக்கு வழிகாட்டுபவர்கள் மகான்கள் எனப்படுவர்.

1. கோவில்களில் செய்யும் அபிஷேகம்
இன்று நாம் சிலைகளுக்கு பால் அபிஷேகம், தேன் அபிஷேகம், சந்தன அபிஷேகம் செய்கின்றோம். அந்தச் சிலை, நமக்கு நல்லது செய்யும் என்று நினைக்கின்றோம்.
துவைதம் என்றால், உருவப் பொருளை வணங்கி அருவப் பொருளைப் பெறமுடியும் என்று காட்டியுள்ளார்கள் ஞானிகள். இன்று உருவப் பொருளை வணங்கி,
அருபம் எப்படிக் கிடைக்கின்றது?
என்று யாரும் சொல்வதில்லை.
இன்று தெய்வச் சிலைக்குமுன் படைத்திருக்கும் மலரோ மற்ற மலரின் தன்மையோ, அங்கு உணவாகப் படைத்திருக்கும் பொருளோ நறுமணங்களைப் பரப்பச் செய்யும்.
அப்படிப்பட்ட அந்த உணர்வின் சத்துக்களை அங்கே படைத்து, சிலைக்கு அபிஷேகிக்கச் செய்து, அதன் உணர்வின் நிலைகளை நாம் பருகக் காட்டுகின்றார்கள். அபிஷேகம் செய்யும் பொழுது, நம்மைக் கண்ணாரப் பார்க்கச் செய்கின்றார்கள். நாம் அதைப் பார்க்கும் பொழுது என்ன செய்யவேண்டும்?
2. அபிஷேகம் செய்ய வேண்டிய நெறி
அந்தச் சந்தனைத்தைப் போன்ற மணம் நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கினால், அந்த உணர்வின் அலைகள் நம் உயிருக்குள் அபிஷேகம் ஆகும்.
அந்த மலரைப் போன்ற மணம் பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது, நம் உயிருக்கு அபிஷேகம் ஆகின்றது.
பன்னீரைப் போன்ற அந்த நறுமணம் பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது, நமது உயிருக்கு நறுமணம் கிடைக்கின்றது.
அங்கே கனிகள் படைக்கப்பட்டுள்ளது. அதைப் பார்க்கும் பொழுது, அந்தக் கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணவேண்டும்.
சூட்சம நிலைகளிலிருந்துதான் நாம் இந்த உடலைப் பெற்றிருக்கின்றோம். சுவைத்துப் பார்க்கும் பொழுது அந்தச் சுவையினை அறிகின்றோம். அதனையே நுகர்கின்றபொழுது, அந்த மணத்தை அறிகின்றோம்.
சூட்சம நிலைகள் பெற்றதை
உடலாக நீ எவ்வாறு ஆக்கவேண்டும் என்று
தெளிவாகக் கூறியுள்ளார்.
நீ தேன் அபிஷேகம், பால் அபிஷேகம், கனி அபிஷேகம் இவைகளை அந்தச் சிலைக்குச் செய்வதினால் ஒரு பலனும் தராது. ஆனால்,
அங்கே காட்டும் பொருளை நீ கண்டுணர்ந்து,
அதை எண்ணத்தால் (சூட்சமத்தால்”) நுகர்ந்து
உன் உடலுக்குள் செலுத்தும் பொழுது,
அந்த உணர்வின் அலையாக உயிர் இயங்குகின்றது.

அங்கே உன் உயிருக்கு அபிஷேகம் ஆகின்றது.